குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி Buy Viagra தினத்தன்று இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ என்பவர் இனங் காணப்பட்டுள்ளார்.இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில் குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார்.

மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment