கலீல் என்ற செங்கொடியின் கட்டுரைக்கு நல்லூர் முரசு ஜாகிர் எழுதிய மறுப்பு கடிதம்.

கலீல்…… எப்படி நலமா?
இந்த மதங்கள் உன்னை என்ன செய்தது…..
அதை வைத்து வியாபாரம் செய்து கொணடிருக்கிறாய்…..
எந்த மதமாவது உன்னை கட்டாயப் படுத்துகிறதா? இதில் தான் நீ இருக்க வேண்டும்…. இப்படித்தான் வாழ வேண்டும் என்று?
மகஇக என்கிற பொதுவுடமை உன்னை கவர்ந்ததாக அறிமுகத்தில் கூறியிருக்கிறாய்….. அது உன்னுடைய சுதந்திரம்…. எந்த வழி பிடித்திருக்கிறதோ அதன் படி வாழ்பவன் தான் மனிதன்…..
காட்டுமிராண்டிகள் என்று கூறுவது…. அறிவுக்கு ஏற்புடைய வாதமாக கொள்ள முடியாது …. அந்த காட்டுமிராண்டிகளில் ஒருவனாக உன் தரத்தை buy Bactrim online உயர்த்திக் கொண்டவர்களில் நீயும் ஒருவன்….. உமர்ந்தரகன் என்கிற குடும்பததுக்காரனுக்கு தான் கடையநல்லூர் ஜமாத்தில் பெண் கொடுத்தார்கள். நீ செங்கொடி யென்றால் அது நடந்திருக்குமா?
வெளிநாட்டு சுகபோகமான வாழ்க்கை …… நீ காட்டு மிராண்டியாக இருந்த மதம் தான் உனக்கு தந்தது. அப்படி ஒரு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இப்படி ஒரு வியாக்கியானம் தேவையா?
இஸ்லாமிய மதம் இந்து மதம் கிறிஸ்துவ மதம் சீக்கிய மதம் இன்னும் பல மதங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது நியாயமானது அதன் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது தேவையில்லை உன்னை இஸ்லாமிய மதம் நிர்ப்பந்தித்ததா? இதில் தான் இருக்க வேண்டும் என்று…….
நீ செத்த பிறகு உன் மேல் செங்கொடி போர்த்திட வேண்டும் என்று கூறினாயே….. அதை யார் செய்ய?
மகஇக வின் கொள்கை இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்று எங்காவது லெனின் கூறியிருக்கிறாரா? ஏன்டா இந்த கொல வெறி….
நக்ஸலைட் என்று உன்னை தெரிந்தவர்களுக்கு தெரியும்… ஆனால் உண்மையான கொள்கை வாதியாக இருந்தால் நேருக்கு நேராக களம் காண வேண்டும் உன்னைப் போல் கோளைகள் அந்த இயக்கத்தை விளம்பரத்திற்காக பயன் படுத்த வேண்டாம்.
நீ பொறந்த ஊருக்கு வா…… இங்கு நிறைய காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் அவர்களை உன் ஆழ்ந்த சிந்தனையால் திருத்து .
அதை விட்டு விட்டு கேவலமாக இப்படி ஒளிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வேண்டியிருக்கிறது.
அங்கு இருந்து கொண்டு கிறுக்கன் போல் உழரிக் கொண்டிருக்காதே
முழு கிருக்கனாக ஆகி விடுவதற்கு முன் உன் ஊருக்கு வா. நீ தேடும் நியாயம் இங்கு கிடைக்கும்
இருட்டில் தொலைத்து விட்டு
வெளிச்சத்தில் தேடும் உன்னை
நினைத்தால் வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.

கடையநல்லூர்.org சகோதரர்களுக்கு

உமர்தரகன் கலீல் என்கிற ஒருவன்….. தேவையில்லாமல் அவனுடைய வெப் தளத்தில் மலம் போய்க் கொண்டிருக்கிறான்
அதில் போய் கல் எறிவதால் நம் மேல் தான் விழும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

அவன் மகஇக என்கிற அமைப்பில் செயல்படுவதாக சொல்வான்….
அந்த இயக்கம் பொதுவுடமைக் கருத்துக்கள் நிறைந்தது அதன் செயல்பாடுகள் இவன் போவது போல்
கீழ்த்தனமாக இருக்காது தவிற பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தை நேரடியாக எதிர்ப்பவர்கள் (பெரும் பகுதி தோல்வியைத்தான் சந்திப்பார்கள்)
இவர்கள் சொல்வது நியாயம் இருப்பதுபோல் தெரியும் ஆனால் ஏற்புடையதாக இருக்காது

இவன் வேறு வழியில்லாமல் மதங்களை சாடி எழுதி வருகிறான்
இவனுக்கு என்ன வேணுமாம்?
தெரியாது…..
இவனுடைய கொள்கை என்ன?
அதை சொல்ல தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை.

எழுத்து வழியாக வாதத்திற்கு வா என்று கூறும் இவன் நேரடியாக களத்தில் இருக்க பயப்படுகிறான்
அவன் சார்ந்திருப்பதாக சொல்லும் இயக்கம் யாருக்கும் பயப்படக்கூடிய இயக்கம் அல்ல….
ஆனால் பயந்து கொண்டிருக்கிறான். அதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டியது தான் மிகப் பெரிய சுயநலவாதி என்று.
இவன் அந்த இயக்கத்தை தனக்கு கவசமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்

தனி நபர் விமர்சனமே விசாரணைக்குறியதாக இருக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கானோர் நம்பிக்கையில் இருக்கும் ஒரு மார்க்க நம்பிக்கையை கொச்சைப்படுத்தி
எழுதிய விசயத்தை தனது தளத்தில் பதித்து விட்டு அதை ஒப்புக்கொள்கிறான் ஒருவன். அதுவரையில் இருந்து வந்த அந்த கட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்கு மாறுதலாக செயல் பட ஆரம்பிக்கும் போது அந்த கூட்டமைப்பு அவனை ஒதுக்கி வைக்கிறது. இதை காட்டுமிராண்டித் தனம் என்று கூறுகிறான் இந்த மாமேதை. இவங்களைலா யாரு இஸ்லாத்துல இருக்கணும்னு சொன்னாங்க…. யாரையும் கட்டாயப்படுத்தி நிர்ப்பந்திக்க முடியாதுங்றது எல்லோருக்கும் தெரியும்.

இவனுக்கு இஸ்லாத்துல நம்பிக்கை இல்லைனா விட்டுட்டு போகட்டும்…. அதனால யாருக்கு லாப நஷ்டம்…. இவனுக்கு தைரியம் இருக்கா நேரடியாக ஊருக்கு வந்து இவன் சார்ந்திருக்கும் ஜமாஅத்துல ”உங்க மார்க்கம் பிடிக்கல… எனக்கும் உங்க மார்க்கத்துக்கும் சம்பந்தம் இல்ல” ன்னு சொல்லிட்டு குடும்பத்தோட காட்ல போய் செட்டில் ஆக வேண்டியது தானே அத விட்டுட்டு பொதுவுடமைய பத்தி பேசுறா……

இவ சேர்ந்திருக்கிற கூட்டம் எதையாவது சாதிச்சிருக்கான்னு சொல்ல முடியுமா?
தான் இன்னார் என்கிற புகைப்பட அடையாளத்தோடு இவனால செய்தி வெளியிட முடியுமா?
மாட்டிக்கிட்டா தனக்கும் இந்த தளத்திற்கு சம்பந்தமில்லைன்னு தப்பிக்கிறதுக்கு அவன் போட்டிருக்கும் வேசம் தான் ”செங்கொடி.”

நல்லூர் முரசு ஜாகிர்

Add Comment