கள்ளநோட்டு அச்சடித்த கேரள தம்பதி நெல்லையில் கைது !

நெல்லையில் கேரள தம்பதி தம்பதி ஒன்று 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளதை கண்டுபிடித்த பட்டாசுக் கடையினர் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஃபீக் மற்று அவரது மனைவி அஸ்வதி. இவர்கள் இருவரும் நெல்லை அபிசேகபட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

Ampicillin online justify;”>தீபாவளிக்கு முதல் நாள் இரவு நெல்லை ஜங்ஷனில் உள்ள பட்டாசுக் கடைகளில் அடிக்கடி வந்து 500 ரூபாய நோட்டுக்களை கொடுத்து நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கின்றார் ரஃபீக். ஒரே கடையில் பல முறை 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு மட்டும் பட்டாசு வாங்குவது, கடையில் இருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் ரஃபீக்கை பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடுவதைக் கண்ட பொதுமக்கள் அவரை துரத்திப் பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அபிசேகபட்டியில் ரஃபீக் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது நீர் எழுத்திலான காந்தி உருவத்தின் ஸ்கிரீன் பிரிண்ட், ஸ்கேனர், பிரிண்டர், முழுமையாக அச்சடிக்கப்பட்ட மற்றும் பகுதியாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவியையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment