கடையநல்லூரில் சாக்கடை கலந்த குடிநீர்!நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்.

கடையநல்லூரில் சாக்கடை கலந்த குடிநீர்!நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்.

buy Ampicillin online alt=”” width=”550″ height=”366″ />கடையநல்லூர் 22,23 மற்றும் 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிதண்ணீரில் சாக்கடை கலந்ததையடுத்து
அந்த பகுதி பெண்கள் உட்பட அனைவரும் நகராட்சியை முற்றுக்கையிட்டனர்.

மேலக்கடையநல்லூர் 22,23,25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் தோண்டும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு நடந்து வந்தன.

அந்த பகுதியில் அமைந்துள்ள சாக்கடை கழிவு நீர்,தோண்டப்பட்ட குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியில் கலந்ததால் அந்த பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் சாக்கடை கலந்த குடிதண்ணீர் வருவது கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து,அந்த பகுதி மக்கள் சாக்கடை கலந்த குடிநீர் குடங்களுடன் நகராட்சியை இன்று(06.03.2012) முற்றுக்கையிட்டனர்.

இன்று கடையநல்லூரில் நோய்கள் பரவுவதற்கு காரணமே இது போன்ற சாக்கடை கழிவுகள் மக்கள் அருந்தும் குடிதண்ணீரில் கலப்பதனால்தான்.

எப்போது சரிசெய்யப்படும்?
பழுது பார்ப்பதற்காக தோண்டப்பட்ட குடிநீர் குழாய்கள்,மூடப்படாத தெருவோர சாக்கடைகள் மற்றும் ஆங்காங்கே காணப்படும் அள்ளபடாத குப்பைகள்.இவைகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால நேரத்தில் நகராட்சி நிர்வாகம் கவனித்தால் நோயில்லாத நல்லூரை காணலாம்.

தகவல்:பஷீர் அஹமது

Add Comment