சவூதியில் 550 போலி வெளிநாட்டுப் பொறியாளர்கள் – ‘பொறி’ வைத்து நடவடிக்கை

சவூதியில் 550 போலி வெளிநாட்டுப் பொறியாளர்கள் – ‘பொறி’ வைத்து நடவடிக்கை

சவூதியில் வெளிநாட்டுப் பொறியாளர்கள் 550 பேர் போலியான பொறியியல் சான்றிதழ்களை அளித்துள்ளதாக சவூதி பொறியாளர் சங்கம் (Saudi Engineers Association) Buy Viagra Online No Prescription கண்டறிந்துள்ளது. இத்தகவலை SEA சங்கத்தலைவர் அப்துல்லா பக்சான் தெரிவித்துள்ளார். சவூதி அரசின் அண்மை கட்டளைப்படி, பொறியியல் பணியனுமதியில் வந்துள்ளோர் அனைவரும் தத்தம் பொறியியல் படிப்புச்சான்றிதழை இச்சங்கத்தில் (SEA) பதிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போலிகள் மீது ‘பொறி’ வைத்து நடவடிக்கை எடுக்கும்படி உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்பட உள்ளதாகவும் பக்சான் தெரிவித்தார். பக்சான் மேலும் கூறுகையில், சவூதி அரேபிய பொறியாளர்களுக்கான பயிற்சிக்காக, சவூதி வர்த்தக மற்றும் தொழிலக அமைச்சகம் குறிப்பிடத்தக்க பல்கலைகழகங்களுடன் ஒருங்கிணைந்த திட்டங்களை மேற்கொள்ள உள்ளது என்றார். மேலும் சவூதி குடிமை நலத்துறை அமைச்சகம் அங்கிகரித்த புதிய சம்பள விகிதத்தை பொறியாளர்களுக்கு வழங்க தொழிக அமைச்சர் டாக்டர். தஃபீக் அல் ரபியா ஏற்பாடுகள் செய்வதாகவும் பக்-ஷான் தெரிவித்தார். கடந்த வாரம் ஜெத்தாவில் நடைபெற்ற அரபுப் பொறியாளர்களின் 26 ஆவது மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட; கருத்துரைக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அமைச்சருடன் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.சவூதி: 550 போலி இஞ்சினியரிங் சான்றிதழ்கள்
Thanks to inneram.com

-க.கா.செ.

Add Comment