இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.44,000 கோடி வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.44,000 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மும்பையில் நடந்த அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய அவர்

உற்பத்தித்துறை, போக்குவரத்து, மருந்து தாயாரிப்பு, மாசற்ற எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு இந்த நூற்றாண்டில் உறுதியானதாக மாறி இருக்கிறது. அமெரிக்காவின் டிரேட் பார்ட்னர்கள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும். (இப்போது இந்தியா 12வது இடத்தில் உள்ளது).

Buy Doxycycline justify;”>அமெரிக்க முதலீடுகளுக்குத் தடையாக உள்ள வர்த்தக தடைகளை இந்தியா நீக்க வேண்டும். அதேபோல் இந்தியாவுக்கு எதிராக உள்ள வர்த்தக தடைகளை நீக்குவதில் அமெரிக்காவும் உறுதியாக உள்ளது.

வர்த்தகம் என்பது ஒரு வழிப் பாதையாக இருக்கக்கூடாது. அது இரு வழி வர்த்தகமாக இருக்க வேண்டும். இதனால் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, மக்களின் வாழ்க்கை தரமும் உயரும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 20 ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ரூ.44,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தங்களால் போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு பல விமானங்களை விற்பனை செய்ய இருக்கிறது.

ஜி.இ. நிறுவனம் நூற்றுக்கணக்கான மின் தயாரிப்புக் கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய இருக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவில் 50,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகில் இன்று வேகமாக வளர்ந்து வரும், ஏற்றுமதிக்கு உகந்த வர்த்தக சந்தையாக இந்தியா விளங்குகிறது. அவுட்சோர்சிங் மூலம் பணிகளை நிறைவேற்றும் பிபிஓ, கால் சென்டர்களின் முக்கிய மையமாக இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்காவில் ஏராளமான பேர் வேலை இழந்துள்ளனர். இதுதான் உண்மை நிலவரம்.

உலகமயமாக்கல் காரணமாக அமெரிக்காவில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிட்டன. உலகமயமாக்கல் காரணமாக அமெரிக்காவுக்குக் கிடைத்த அனுபவம் இதுதான் என்றார்.

Add Comment