மீண்டும் கடையநல்லூர் ஆடு அறுப்பு மனையில் நாய் கடித்த ஆட்டை அறுத்து விற்பனை செய்ய முயற்சி…!

மீண்டும் கடையநல்லூர் ஆடு அறுப்பு மனையில் Bactrim No Prescription நாய்கடித்த ஆட்டை அறுத்து விற்பனை செய்ய முயன்றதால் பொதுமக்கள் ஆடறுப்பு மனையை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஆடறுப்பு மனை பல லட்சம் செலவில் மலம்பாட்டை சாலையில்அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடறுப்பு மனையில்தான் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று இப்பகுதிக்கு நாய்கடித்த ஆட்டை கொண்டு வந்து விற்பனைக்காக வைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆட்டினை கறிக்காக உரிக்கும்போது பொதுமக்கள் சிலர் அதனை கண்டறிந்துவிட்டனர்.ஏற்கனவே இது போல உண்பதற்கு தகுதியற்ற இறந்து போன ஆட்டினை விற்பனைக்காக ஆட்டறுப்பு மனைக்கு கொண்டு வந்த சம்பவத்தினையடுத்து நாய்கடித்த ஆட்டை அறுத்து விற்பனை செய்ய முயச்சித்ததால் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர்.
பொதுமக்களை காவல் துறையினர் சமரசப்படுத்தினர். இந்நிலையில் ஆடறுப்பு மனையை பொது மக்கள் முற்றுகையிட்டு இது போன்ற சம்பவம் மேலும் நடை பெராதவண்ணம் இருக்க வேண்டும் என்று காவல் துறையிடம் வாக்குவாதத்தில் இடுபட்டனர் காவல் துறை இது மனித உரிமை மீறிய செயல் என்று பொது மக்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு மேற்படி கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறியதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது.
மேலும் ஊர் ஜமாத்தில் ஆட்டு இறைச்சியை யாரும் வாங்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanks: sonny halith..

Add Comment