சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிடித்து எரிந்த வேன்!

சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே ஒரு வேன் தீப்பிடித்து எரிந்தது.

மொரீஷியசில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்திறங்கியது.

இதையடுத்து அந்த விமானத்தில் உள்ள பயணிகளின் லக்கேஜுகளை ஏற்றுவதற்காக வேன் ஒன்று ஓடுபாதை அருகே சென்று நின்றது.

அப்போது அந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து டிரைவர் இறங்கி ஓடியதால் உயிர் தப்பினார்.

5 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து தீயை அணைத்தன. ஆனால், அதற்குள் அந்த வேன் முழுவதுமாக எரிந்து போய்விட்டது.

மொரீஷியஸ் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த விமானத்தை 30 நிமிடம் தாமதமாக தரையிறங்குமாறு தரைக் கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் சென்னை வான் பரப்பில் 30 நிமிடங்கள் வட்டமடித்தது.

வேனில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அது ஓடு பாதையை விட்டு தூரமாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் தான் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே வேன் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேனின் டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருன்றனர். இந்த தீ விபத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையம்…வெளியே செல்ல மறுத்த பயணி:

இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வாலிபர், வெளியே செல்ல மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசியை சேர்ந்தவர் யுவராஜ் (25) சிங்கப்பூரில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் தனது உடமைகளை பெற்றுக்கொண்ட அவர், விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அங்கேயே இருக்கப்
போவதாகக் கூறினார்.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியும் அவர் எதையும் கூறவில்லை.

சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்த அவர், வெளியே சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்றார்.

இதையடுத்து, விமான நிலைய மேலாளர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள யுவராஜின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின்னர் அவர்களிடம் யுவராஜை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் Buy cheap Levitra சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Add Comment