ஸ்டிராஸ் சதம்: இங்கிலாந்து லெவன் வெற்றி

மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டன் ஸ்டிராஸ் சதமடித்து கைகொடுக்க, இங்கிலாந்து லெவன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 25ம் தேதி பிரிஸ்பேனில் Bactrim No Prescription துவங்குகிறது. இதற்கு முன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து லெவன், மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி பெர்த்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா 242/8 (“டிக்ளேர்’), இங்கிலாந்து லெவன் 223/8 (“டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய மேற்கு ஆஸ்திரேலியா அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
சுவான் துல்லியம்:
நேற்று 3வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ராபின்சன் (54), சுவார்ட் (30), ரோன்சி (27) கைகொடுக்க, மேற்கு ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 223 ரன்களுக்கு “ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து லெவன் அணியின் சுவான் 4, ஸ்டீவன் பின், ஸ்டூவர்ட் பிராட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஸ்டிராஸ் அபாரம்:
பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து லெவன் அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (120*), கெவின் பீட்டர்சன் (35), கோலிங்வுட் (26), இயான் பெல் (22), டிராட் (23) நம்பிக்கை அளித்தனர். இங்கிலாந்து லெவன் அணி 4 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வரும் 11ம் தேதி அடிலெய்டில் துவங்கும் 3 நாள் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து லெவன், தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Add Comment