உத்தரபிரதேச சட்டமன்றத்தில் 63 முஸ்லிம்கள்!

Buy cheap Ampicillin justify;”>உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 63 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் 40 பேரும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 14 பேரும், தேர்வாகியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு 18 சத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்ற உறுதிமொழியை அளித்த காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

அமைதி இயக்கம் சார்பில் 3 பேரும், கவுமி ஏக்தா தள் சார்பில் 2 பேரும் , ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் சுயேச்சையாகவும் நின்று எம்,எல்,ஏ,.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2007 ல் சட்டமன்றத்தேர்தலின் மூலம் உத்தரபிரதேச சட்டமன்றத்தினுள் 56 முஸ்லிம்கள் நுழைந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.1993இல் அயோத்தி பிரச்னை இருந்த போது நடந்த தேர்தலில் 25 முஸ்லிம்கள் மட்டுமே தேர்வாகியிருந்தனர். சமீபத்திய தேர்தலில் தான் வரலாற்றிலேயே கூடுதலாக 63 பேர் முஸ்லிம்கள் எம்,எல்.ஏ.,வாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks

seithy

Add Comment