ஆஸி., ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது இலங்கை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், ஏற்கனவே தொடரை வென்ற இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஏற்கனவே தொடரை வென்று இருந்தது. நேற்று, முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. “டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
மெக்கே அசத்தல்:
ஆஸ்திரேலிய வீரர் மெக்கே “வேகத்தில்’ இலங்கை அணி சிதறிப் போனது. இவர், தில்ஷன்(1), சங்ககரா(0), ஜெயவர்தனா(0) உள்ளிட்ட 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தரங்கா (28), சமரசில்வா (33) தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்ட வில்லை. இலங்கை அணி 32 ஓவரில் 115 ரன்களுக்கு சுருண்டது.
அப்பாடா வெற்றி…
சுலப buy Doxycycline online இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (15) ஏமாற்றினார். ஹாடின் 31 ரன்கள் எடுத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மைக்கேல் கிளார்க் அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 21.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. கிளார்க் (50), மைக்கேல் ஹசி (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்டநாயகனாக மெக்கே தேர்வு செய்யப்பட்டார்.
முதலிரண்டு போட்டிகளில் வென்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
தொடர்ந்து 7 சர்வதேச போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணிக்கு, நேற்றைய வெற்றி பெரும் நிம்மதி அளித்திருக்கும்.

Add Comment