நியூசி., பிடியில் தப்புமா இந்தியா: கைகொடுப்பாரா லட்சுமண்

ஆமதாபாத் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் சேவக், சச்சின், டிராவிட் உள்ளிட்ட “டாப் -ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. லட்சுமண் மீண்டும் ஒரு முறை தூணாக நின்று கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ் மார்டின் 5 விக்கெட் வீழ்த்த, நியூசிலாந்து அணி வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்களுக்கு எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது.
வில்லியம்சன் சதம்:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். ஸ்ரீசாந்த் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன் சதத்தை எட்டினார். இவர் 131 ரன்கள் எடுத்த நிலையில், ஓஜா சுழலில் வீழ்ந்தார். பின் வெட்டோரியும் (41) வெளியேறினார். ஹாப்கின்ஸ், படேல் இருவரும் தலா 14 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 459 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
விக்கெட் மடமட:
இரண்டாவது இன்னிங்சை துவக்க இந்திய அணிக்கு, நியூசிலாந்து வீரர் கிறிஸ் மார்டின் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார். இவரது வேகத்தில் அணியின் “டாப்-ஆர்டர்’ அப்படியே சரிந்தது. காம்பிர் “டக்’ அவுட்டானார். அடுத்து வந்தவர்களும் ஏனோதானோ என ஆடினர். அதிரடி சேவக் (1), டிராவிட் தவறால் தேவையில்லாமல் ரன் அவுட்டானார். அனுபவ டிராவிட் (1), சச்சின் (12) மற்றும் ரெய்னா(0), மார்டின் வேகத்தில் நடையை கட்டினர். இதையடுத்து இந்திய அணி 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின் கேப்டன் தோனி, லட்சுமண் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். 6வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் தோனியும் (22), மார்டின் பந்தில் போல்டானார். ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து, 110 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. லட்சுமண் (34), ஹர்பஜன் (12) அவுட்டாகாமல் உள்ளனர்.
அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்தின் மார்டின், டெஸ்ட் அரங்கில் 9வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
யாருக்கு வாய்ப்பு?
இன்று கடைசி நாள் ஆட்டத்தில், எவ்வித முடிவும் ஏற்படலாம். லட்சுமண் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி ஓரளவுக்கு வலுவான ஸ்கோரை எட்டி, நியூசிலாந்துக்கு சவால் விடுக்கலாம். மாறாக, இந்திய வீரர்கள் விரைவில் வெளியேறினால் நியூசிலாந்து பக்கம் வெற்றி வசப்படலாம். இரு அணிகளும் மந்தமாக ஆடினால், போட்டி “டிரா’வில் முடியவும் வாய்ப்பு உள்ளது.
வில்லியம்சன் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை வில்லியம்சன் (131) பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களில் 105 ரன்கள் எடுத்த புரூஸ் டெய்லர் (1964-65), பிளமிங் (92 ரன்கள், 1993-94)) உள்ளனர்.
4000 ரன்+ 300 விக்.,
நேற்று நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, 38 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட்டில் 4000 ரன்கள், 300 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது “ஆல்- ரவுண்டர்’ என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் இந்தியாவின் கபில் தேவ், இங்கிலாந்தின் இயான் போத்தம் இச்சாதனை படைத்துள்ளனர்.
170 ரன்கள் போதும்
இந்திய வீரர் பிரக்யான் ஓஜா கூறுகையில்,”” கிறிஸ் மார்டின் சிறப்பாக பவுலிங் செய்தார். ஆனால் இன்னும் லட்சுமண், ஹர்பஜன் களத்தில் உள்ளனர். தவிர, ஜாகிர் கான், நானும் உள்ளோம். ஆடுகளம் தற்போது பவுலர்களுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. இன்று உணவு இடைவேளை மற்றும் அதற்கு பின்னும் பேட்டிங்கை தொடர விரும்புகிறோம். எப்படியும் 170 ரன்கள் எடுத்து விட்டால், அப்புறம் எதிரணிக்கு சிக்கல் தான்,” என்றார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 487
நியூசிலாந்து
மெக்கின்டோஸ்(கே)தோனி(ப)ஜாகிர் 0(10)
மெக்கலம்(ஸ்டம்ப்டு)தோனி(ப)ஓஜா 65(122)
வாட்லிங்(ப)ஓஜா 6 (22)
டெய்லர்(கே)லட்சுமண்(ப)ஹர்பஜன் 56(124)
ரைடர்–எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 103(205)
வில்லிம்சன்(கே)லட்சுமண்(ப)ஓஜா 131(299)
வெட்டோரி(கே)தோனி(ப)ரெய்னா 41(95)
ஹாப்கின்ஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 14(36)
படேல்(ப)ஸ்ரீசாந்த் 14(35)
பென்னட்(ப)ஜாகிர் 4(30)
மார்டின்-அவுட் இல்லை- 3(21)
உதிரிகள் 22
மொத்தம் (165.4 ஓவரில் ஆல் அவுட்) 459
விக்கெட் வீழ்ச்சி: 1-8 (மெக்கின்டோஸ்), 2-27 (வாட்லிங்), 3—131(டெய்லர்), 4-137(மெக்கலம்), 5-331(ரைடர்), 6-417(வில்லியம்சன்), 7-417(வெட்டோரி), 8-445(ஹாப்கின்ஸ்), 9-445(படேல்), 10-459(பென்னட்).
பந்து வீச்சு: ஜாகிர் 28.4-6-70-2, ஸ்ரீசாந்த் 26-2-88-2, ஓஜா 53-14-107-4, ஹர்பஜன் 43-7-112-1, சேவக் 1-0-7-0, ரெய்னா 12-1-42-1, சச்சின் 2-0-16-0.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா
காம்பிர்(கே)ஹாப்கின்ஸ்(ப)மார்டின் 0(3)
சேவக்-ரன் அவுட்(கப்டில்/வெட்டோரி) 1(1)
டிராவிட்(கே)ஹாப்கின்ஸ்(ப)மார்டின் 1(16)
சச்சின்(ப)மார்டின் 12(25)
லட்சுமண்–அவுட் இல்லை- 34(99)
ரெய்னா(கே)டெய்லர்(ப)மார்டின் 0(4)
தோனி(ப)மார்டின் 22(72)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 12(20)
உதிரிகள் 0
மொத்தம் (40 ஓவரில் 6 விக்.,) 82
விக்கெட் வீழ்ச்சி: 0-1(காம்பிர்), 2-1(சேவக்), 3-2(டிராவிட்), 4-15(சச்சின்), 5-15(ரெய்னா), 6-65(தோனி).
பந்துவீச்சு: Ampicillin No Prescription மார்டின் 13-7-25-5, வெட்டோரி 15-2-31-0, ஜீதன் படேல் 10-1-18-0, வில்லியம்சன் 2-0-8-0.

Add Comment