3 ஆண்டுகளுக்கு சோனியா காந்தியின் கரன்ட் பில் ரூ. 7 லட்சம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, ஜன்பாத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 7.47 லட்சம் அளவுக்கு மின்சாரத்தை செல்விட்டுள்ளனராம்.

ஆர்.டி.ஐ. விசாரணை மூலம் இது தெரிய வந்துள்ளது. இந்த கட்டணத்தில் சோனியா கட்டிய தொகை வெறும் ரூ. 9000 மட்டும்தான். ரூ. 7.38 லட்சத்தை லோக்சபா செயலகம் கட்டியுள்ளது.

கடந்த 2007-09 வரையிலான கால கட்டத்தில் சோனியா வீட்டினர் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட் மின்சாரத்தை செலவிட்டுள்ளனர். ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நரேஷ் சைனி என்பவர் இதுதொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் லோக்சபா செயலகத்திடம் கேட்டு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சோனியா காந்தி மின்சாரக் கட்டண பாக்கி எதுவும் வைக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

அதேபோல செல்போன் வசதி, எம்டிஎன்எல் லேன்ட் லைன் தொலைபேசி வசதி உள்ளிட்டவற்றை சோனியா காந்தி பெறவில்லை. அதேபோல அவரது பெயரில் குடிநீர் இணைப்பும் இல்லையாம்.

சோனியா காந்தி தற்போது குடியிருக்கும் 10, ஜன்பாத் வீடு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை online pharmacy without prescription ஒதுக்கியதாகும். எம்.பி. என்றவகையில் இந்த வீடு சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் பாதுகாப்பு, சுற்றுப்பயண செலவுகள், உணவு செலவுகள் உள்ளிட்டவை குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்றும் லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளாக சைனி தெரிவித்துள்ளார்.

Add Comment