வடசென்னை பகுதியில் விஷ வாயு பீதி: மக்கள் ஓட்டம்

வட சென்னைப் பகுதியில், நேற்று விஷ வாயு பீதி ஏற்படவே மக்கள் தெருக்களில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று வடசென்னை பகுதியில் விஷ வாயு கசிந்ததாக வதந்தி பரவியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, கொடுங்கையுர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, திருவொற்றியுர் தாங்கல், மணலி, தியாகராஜபுரம் மற்றும் காலடிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் வாயு கசிவு நெடி வீசியது.

மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சமையல் காஸ் சிலிண்டரில் இருந்து தான் கசிவு ஏற்படுகிறதோ என்று நினைத்து அவரவர் வீடுகளில் சோதனை செய்தனர். ஆனால் எந்த வீட்டிலும் கசிவு ஏற்படவில்லை.

இந்த நெடி மணலியில் இருந்து பேசின்பிரிட்ஜ் வரை வீசியது. நேரம் ஆக ஆக நெடி அதிகரித்து மக்களுக்கு கண் மற்றும் மூக்கு எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மணலி, திருவொற்றியுர் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் Viagra No Prescription என்ற சந்தேகம் ழுந்தது.

எரிச்சல் தாங்காமல் மக்கள் துணியால் முகத்தை மூடிக்கொண்டு தெருக்களில் ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர்.

காஸ் கசிவு எங்கிருந்து ஏற்பட்டுள்ளு என்பதை அறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

Add Comment