நானிலத்தில் ஓர் நல்லூர் கடையநல்லூர்…

நானிலத்தில் ஓர் நல்லூர்
கடைய நல்லூர் எனும்
நமது ஊர்…
நபிகள் நாயகம் தந்த வாழ்க்கை
நெறியை நலமாய் ஏற்ற ஊர் அது
நல்லூர் என்னும் நமது ஊர்..

நடந்து போகும் தூரத்தில்
மலைகளும்…
மலைகளில் அந்து விழும்
அருவிகளும்…
தளக் தளக் என்று தளும்பி
காற்றோடு கரை மோதும்
அலைகளை கொண்ட மேற்கே
அடக்குளமும்,கிழக்கே தெப்பமும்..
கண்கள் எட்டிய தூரமெல்லாம்
பச்சையாய் பரந்து நிற்கும்
வயல் வெளிகளும்…
ஓங்கி உயர்ந்த தென்னை
மரங்கள் என இயற்க்கை
தவழ்வதும் நமது ஊரில்தான்…

சடக் சடக் என்ற தறி சத்தமும்
கிர் கிர் என்று தார் சுத்தும் சத்தமும்
வீடுகளில் ஓயாது ஒலித்து
உழைப்பின் அங்கமாய் விளங்கியதும்
நமது ஊர்தான்…

தெருவெங்கும் பள்ளிவாசல்களும்
பாங்கின் சத்தம் ஓங்கி ஒலித்ததும்
தொழுகைக்காக விரைந்து சென்றதும்…

மண மணக்கும் சால்னாவும்
சுட சுடச்சுட கல்லில் வேகும்
புரோட்டாவும்…
அடி சாயும் ஆப்பமும்
நெய் மணக்கும் உப்புமாவும்
வார்க்கப்பட்ட கேசரியும் என
சுவை கூட்டிய ஊரும் நமது ஊர் தான்

அழகிய பள்ளிக்கூடங்களும்
பாட்டோடு பாடம் சொல்லித் தந்த
சார்வாள்களும்…
சிங்கால் விட்டதும் வாங்கி திண்ண
பாக்கெட் ஜஸ் மற்றும் பெப்ஸி ஜஸ்யும்
இலந்தப்பழ மிட்டாயும் என பள்ளிவாழ்க்கையை அழகாக்கியதும்
நமது ஊரில்தான்…

ஏக்கத்தோடும் தவிப்போடும்
வெளிநாடு சென்ற கணவனின்
வருகைக்காக காத்திருக்கும்
பெண்களும்….
திருமணங்களிலும் இதர விஷேசங்களிலும்
குடும்பம் எல்லாம் ஒன்றினைந்து
ஒரே உலையில் அரிசியிட்டு
கொண்டாடி மகிழ்ந்ததும்
நமது ஊரில்தான்…

சிங்கப்பூர் மலேசியா சவுதி
துபாய் என நாடு கடந்து சென்று
நமது buy Cialis online ஊரின் பெருமையோடு
வாழ்ந்துகொண்டிருப்பதும்
நமது ஊர் வாசிகள்தான்….

இப்படியாய் இப்படியாய்
பெருமை கொள்ள எத்தனையோ
இருக்கின்றது நமது ஊரில்
ஊரின் வாசம் இதயதை
நனைக்கிறது!!!!

Add Comment