நிரம்பி வழிந்த கடையநல்லூர், தென்காசி ரயில், பஸ்கள்

தீபாவளி விடுமுறை முடிந்ததை அடுத்து நேற்று கடையநல்லூர்,தென்காசி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து சனி, ஞாயிற்றுகிழமை விடுமுறை தினங்கள் என்பதால் இந்த ஆண்டு மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர்களில் பணிபுரிந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சொந்த ஊரில் மூன்று தினங்கள் விடுமுறையை கழித்த நிலையில் நேற்று அனைவரும் தத்தம் பணிக்கு புறப்பட்டனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலின் இரண்டாவது நிலையமான தென்காசியிலேயே ரயில் முழுவதும் நிரம்பி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

பேருந்துகளில் கேட்கவே வேண்டாம், சாதாரண நாட்களிலேயே கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் Buy Cialis Online No Prescription நேற்று கூட்ட நெரிசலில் பயணிகள் திக்கு முக்காடி விட்டனர்.

Add Comment