மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி தாக்குதல்

Buy Levitra justify;”>ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டத்தில்  உறுப்பினருக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.

சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டம், அதன் தலைவர் முனியாண்டி தலைமையில் மேலப்புதுக்குடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் நசீர் உசைன், அஷ்ரப் நிசா, திருமலைச்செல்வன் உள்பட 4 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்படாமல் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போடுவதற்கு உறுப்பினர் நசீர் உசேன் மறுப்பு தெரிவித்தார். இதனால், கூட்டத்திலிருந்து நசீர் உசேன் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, அங்குள்ள பள்ளிவாசல் முன் ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது சேதுக்கரையில் இருந்து ஆட்டோவில் வந்த கும்பல் பெண்கள் மீதும், பள்ளிவாசல் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில் நசீர் உசைன், ஜஹாங்கிர் அலி, குமார், சேகர், முனீஸ்வரன் ஆகிய 5 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உறுப்பினர் நசீர் உசேன்  கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், சேதுக்கரை ஊராட்சி தலைவர் முனியாண்டி, சண்முகசுந்தரம், முனியசாமி, முனீஸ்வரன், சுரேஷ் மற்றும் 35 பேர் மீதும், குமார் அளித்த புகார்படி மேலப்புதுக்குடி முஜீபு, ஜஹாங்கீர் அலி, நசீர் உசேன், சீனி பகுர்தீன், அலி, சலீம் ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, சேதுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேலப்புதுக்குடி ஜமாஅத் தலைவர் சீனி செய்யது சாகுல்ஹமீது  “சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஆண்களும், பெண்களும் திரண்டனர். அப்போது சேதுக்கரையில் இருந்து ஆட்டோவில் வந்த கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தினர், என்றார்

ஊராட்சி தலைவர் முனியாண்டி கூறுகையில், “நசீர் உசேன், என்னை ஒருமையில் பேசினார். அப்போது அங்கு வந்த குமார் இதை கண்டித்தார். ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த குமாரை கும்பலாக கூடி தாக்கினர். ஆட்டோவில் ஆட்களை திரட்டியதாக கூறுவது உண்மையல்ல, என்றார்.

தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், திருப்புல்லாணி எஸ்.ஐ., மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

thanks

inneram

Add Comment