டாடா நானோ விலை உயர்வு!

டாடா நிறுவனம் தனது நானோ கார்களின் விலையை ரூ. 9000 வரை உயர்த்தியுள்ளது.

உலகிலேயே மிகவும் விலை குறைந்த, குட்டிக் கார் என்ற பெருமையுடன் அறிமுகமானது நானோ. இதன் அறிமுக விலையாக ரூ. 1 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை 1 லட்சம் ரூபாய் கார் என்று கூற முடியாது. காரணம், அதற்கு மேல்தான் தற்போது விலை உள்ளது.

இந்த நிலையில் தற்போது buy Ampicillin online கார் விலையை உயர்த்தியுள்ளது டாடா. விலை உயர்வு தவிர்க்க முடியாதது, உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தொடர்ந்து பழைய விலையில் தருவது இயலாத காரியம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு தனது நானோவை ஐரோப்பிய மார்க்கெட்டிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் இறக்கத் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

2012ம் ஆண்டு புதிய என்ஜின், கூடுதல் சவுகரியங்கள், பாதுகாப்பான ஸ்டியரிங், ஏர் பேக்ஸ், ஏபிஎஸ் வசதிகளுடன் கூடிய புதிய நானோவையும் அது களம் இறக்கவுள்ளது.

தனது சனந்த் பேக்டரியில் நானோ கார்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் உற்சாகமடைந்துள்ள டாடா நிறுவனம், இந்த டிசம்பரிலிருந்து மாதத்திற்கு 20 ஆயிரம் கார்களை இங்கிருந்து உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.

தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் நானோ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை 3.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். மேலும், பந்த் நகரில் உள்ள டாடா பேக்டரியில் மாதத்திற்கு 4500 கார்கள் உற்பத்தி செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளதாம்.

Add Comment