என் ஆட்சிக்கு எதிராக ராணுவம் புரட்சி வராது – பாக். பிரதமர்

பாகிஸ்தான் ராணுவம் எனது ராணுவம், அது எனது அரசாங்க விவகாரங்களில் தலையிடாது என்றும், Buy Cialis எனது ஆட்சிக்கு எதிராக புரட்சியில் ஈடுபடாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

லாகூர் நடைபெற்ற கல்வி தொடர்பாக சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

என் ஆட்சியை விமர்சிப்பவர்கள், பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியைப் பொறுத்துக் கொண்டார்கள். அதேபோல, ஜனநாயக ஆட்சியையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

சர்வாதிகாரத்தை விமர்சிக்காத இவர்கள், ஜனநாயக ஆட்சி வந்தவுடன் விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதுதான் ஜனநாயகத்தின் அழகு எ‌ன்று ‌கிலா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Add Comment