100வது சதத்தை அடித்த ‘சச்சின்’

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடித்து, மாபெரும் உலக சாதனையை படைத்தார். வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்தது மூலம் இந்த உலக சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் 100வது சதத்தை எட்டிய ஒரே வீரர் சச்சின் மட்டுமே. இந்த சாதனையின் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் சச்சின்.

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினின் 100வது சதம் மட்டும் எட்டாத கனியாக இருந்தது. கடந்த உலககோப்பையில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது 99வது சதத்தை பூர்த்தி செய்த சச்சினுக்கு அடுத்த சதத்தை அடிக்க 1 வருடம் ஆகிவிட்டது. உலககோப்பைக்கு பிறகு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் சதம் அடிக்க முடியவில்லை.

ஒவ்வொரு ஆட்டமும் சச்சின் சதம் அடிப்பார் என ரசிகர்களுக்கு இடையே நாளுக்கு நாள் எதிர்பார்பு அதிகமானது. கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்த சாதனை நாயகனுக்கு(பேட்டிங்), உலக முழுவதும் ரசிகர்கள் அவரது 100வது சதத்திற்கு ஏங்கியிருந்தன. இந்நிலையில், ஓட்டுமொத்த இந்தியாவையும் தனது இந்த சாதனையும் மூலம் இன்று பெருமை அடையச் செய்துள்ளார். கிரிக்கெட் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின், சாதனைகள் மேலும் தொடர தினகரனின் வாழ்த்துக்கள்.

மற்ற அணிகளுடம் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த விவரம்
(டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி உட்பட)

ஆஸ்திரேலியா     : 20 சதம்
இங்கிலாந்து         : 9 சதம்
நியூசிலாந்து         : 9 சதம்
மேற்கு இந்திய தீவு     : 7 சதம்
இலங்கை         : 17 சதம்
தென் ஆப்ரிக்கா     : 12 சதம்
பாகிஸ்தான்         : 7 சதம்
Bactrim online வங்கதேசம்         : 6 சதம்
ஜிம்பாவே        : 8 சதம்
கென்யா         : 4 சதம்
நம்பிபீயா         : 1 சதம்

மொத்தம் : 100 சதம்

அதுமட்டுமின்றி, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் இதுவரை சதம் அடித்ததே இல்லை. ஆனால் இன்றைய சதத்தின் மூலம், அந்த குறையையும் பூர்த்தி செய்தார். மேலும் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் அதிக சதம் (20 சதம்) அடித்த ஒரே வீரர் சச்சின் தான். டெஸ்ட் போட்டி விளையாட தகுதிப் பெற்ற எல்லா நாடுகளுடன் சச்சின் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks:தினகரன்

Add Comment