இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர் மன்மோகன் சிங்

பாராளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

அவர் மேலும்,  தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத் துவோம் என தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார்.

அவர் பேசுகையில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது, இலங்கைத் தமிழர்கள் குறித்த எம்பிக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட buy Ampicillin online உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.

எனினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும்’’ என அவர் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்பிக்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

source: Nakkeeran.

Add Comment