பாக்., வீரர் ஹைதர் தலைமறைவு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஜல்கர்நைன் ஹைதர், எந்த முன் அறிவிப்பு இன்றி தலை மறைவாகி உள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதை தவிர்த்து, லண்டன் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் 5 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடர் துபாயில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, துபாயில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்கவிருந்த பாகிஸ்தான் அணி வீரர்கள், அனைவரும் அவர்கள் தங்கியிருந்த கிரான்ட் ஹியாத் ஓட்டலில் இருந்து துபாய் சர்வதேச மைதானத்துக்கு கிளம்பினர். ஆனால் ஹைதர் தங்கியிருந்த அறையில், அவரைக் காணவில்லை. இதனால் நேற்றைய போட்டியில், இவருக்குப் பதில் உமர் அக்மல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

உயிருக்கு ஆபத்து?:ஹைதர் தனது “பேஸ்-புக்’ இணையதள பக்கத்தில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அப்பக்கத்தில்,”” தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில், தோல்வி அடைய வேண்டும், என ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து தகவல் வந்தது. இதனால் அணியிலிருந்து விலகிச் செல்கிறேன்,” என்ற செய்தியை பதிவு செய்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தானை சேர்ந்த ஜியோ “டிவி’ உரிமையாளர் சொஹைல் இம்ரானுக்கு, தனது மொபைல் நம்பரிலிருந்து ஒரு “மெசேஜ்’ அனுப்பி உள்ளார் ஹைதர். அதில்,” ஒரு சிலர் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனால் இங்கிருந்து லண்டன் செல்கிறேன். பாகிஸ்தானில் எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,’ என தகவல் அனுப்பி உள்ளார்.

தகவல் இல்லை: இது குறித்து பாகிஸ்தான் அணியின் மானேஜர் நதீம் சர்வார் கூறுகையில்,”” மைதானத்துக்கு செல்ல, அணி வீரர்கள் அனைவரும் கிளம்பினர். ஆனால் ஹைதரை அவரது அறையில் காணவில்லை. அவர் அணி நிர்வாகத்திடம் எதுவும் தெரிவிக்க வில்லை. இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணையை துவக்கி உள்ளோம். இது குறித்து Buy Levitra Online No Prescription ஐ.சி.சி., பாதுகாப்பு குழுவினர் மற்றும் துபாய் போலீசாரிடம் தெரிவித்து உள்ளோம். நேற்று முன் தினம் இரவு என்னிடம், அவரது “பாஸ்போர்ட்டை’ பெற்றுக் கொண்டார். என்ன காரணம் என்பது தெரியவில்லை,” என்றார்.

சூதாட்ட ஏஜன்ட் தொடர்பு?:தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 வது ஒரு நாள் போட்டி, கடந்த 5 ம் தேதி துபாயில் நடந்தது. இதில், பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹைதர் 19 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் நேற்று நடந்த கடைசி போட்டியில், இவர் பங்கேற்க கூடாது என்ற நோக்கில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சூதாட்ட ஏஜன்ட்டுகள் யாரும் அச்சுறுத்தல் விடுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Add Comment