இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), Buy Viagra Online No Prescription விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு “NDA & NA Exams” அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு  எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.

தேர்வை பற்றிய விபரம்:

கல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)
வயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)
விண்ணப்பம் கிடைக்கும் இடம் :
அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால்
011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தின் விலை: ரூ.20.
தேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை “Central Recruitment Stamp” ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது “Central Recruitment Stamp”  தான் ஒட்ட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi – 110069
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).

மேலும் விபரங்கள் http://www.upsc.gov.in/exams/notifications/nda1-2011/indx.htm இந்த இணையதளத்தில் உள்ளது.

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

Add Comment