ரியாத்தில் தவ்ஹீத் ஜமாத் நடத்திய ரத்த தான முகாம்

ரியாத்தில் மிகப் பெரிய அளவில் ரத்த தான முகாமை நடத்தியுள்ளது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு.

ரத்ததானம் செய்து உயிர்காப்பதில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 46 கேடயங்களையும், பாராட்டுக்களையும் கடந்த வாரம் பெற்றது. இது தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை செய்து வருகிறது.

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அதிகமானோர் இரத்தானம் செய்ததில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக 10வது ரத்ததான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

ரியாத் மாநகரிலுள்ள கிங் பஹத் மெடிக்கல் Cialis online சிட்டியில் நடைபெற்ற இந்த முகாமில் 325க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய இம்முகாமில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, கேரளா போன்ற பிற மாநில சகோதர, சகோதரிகளும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் இலங்கை நாட்டவர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

பெண்கள் உட்பட 302 பேர் தங்கள் பெயரை பதிவு செய்த போதும் 277 பேரிடம் மட்டுமே இரத்ததானம் பெறப்பட்டது. இந்த முகாமில் வழங்கப்பட்ட ரத்தம், உலகின் பலநாடுகளில் இருந்து ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வருபவர்களில் தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதற்காக மக்கா, மதீனா நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட இந்த முகாம், ரியாத் மண்டலம் நடத்திய மிகப்பெரிய முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment