இந்தியாவின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவு: ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கவுன்சிலான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் புனரமைப்பிற்கு ஒபாமாவின் தீர்மானம் சிக்கலை ஏற்படுத்தும் என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கத்தின்போது இந்தியா உட்படுத்தப்படும் என பாரக் ஒபாமா இந்திய பாராளுமன்றத்தில் நடத்திய உரையில் தெரிவித்திருந்தார். ஒபாமாவின் இந்த உரைக்கு உடனடியாக பதிலளித்துள்ளது பாகிஸ்தான்.

ஐக்கிய நாடுகள் சபையை கட்டமைப்பதிலும், அதன் கொள்கைகளை வகுப்பதிலும் முக்கிய பங்குவகித்துள்ள அமெரிக்கா,தொலைநோக்கு பார்வையின் ஊடே மட்டுமே எதனையும் செய்யவேண்டும்.

அரசியல் நிர்பந்தங்கள் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா செயல்படாது என பாகிஸ்தான் நம்புகிறது. சர்வதேச சக்தியாக அங்கீகரிக்கப்படுவதற்கான இந்தியாவின் விருப்பத்தை விமர்சித்த பாஸித், அண்டைநாடுகளுடான இந்தியாவின் நடவடிக்கைகளும், கஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிரான மீறுவதுமெல்லாம் ஐ.நா Ampicillin online பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராவதற்கு இந்தியாவிற்கு எதிரான காரணிகளாகும். என அப்துல் பாஸித் தெரிவித்துள்ளார்.

Add Comment