சீக்கியர்களின் தலைப்பாகையை பரிசோதிக்கும் அமெரிக்கா முடிவு சர்ச்சையை கிளப்பியது

சீக்கியர்களின் தலைப்பாகைகள் எப்பொழுது வேண்டுமானாலும் பரிசோதிக்கப்படும் என்ற அமெரிக்க நேசனல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேசனின்(டி.எஸ்.ஐ) தீர்மானம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாதுகாப்பு பரிசோதனைக்காக சீக்கியர்களின் தலைப்பாகை விமானநிலையத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என டி.எஸ்.ஐ நேற்று முன்தினம் Ampicillin No Prescription உத்தரவிட்டிருந்தது.

அமெரிக்க அதிகாரிகளின் இந்த தீர்மானம் சீக்கியர்களிடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்க விமானநிலையங்களில் சீக்கிய சமூகத்தினரின் தலைப்பாகையில் கையை தானாக தடவியபிறகு வெடிப்பொருட்கள் இல்லையென்பதை நிரூபிக்க ஸ்கானரில் கைகளை வைத்துக் காண்பிக்கவேண்டும். இதுதான் வழக்கமாக நடைப்பெற்றுவரும் பரிசோதனை முறையாகும்.

ஆனால்,புதிய சட்டம் வருவதன் மூலம் சீக்கியர்கள் தங்களின் நம்பிக்கையின் காரணமாக அணியும் தலைப்பாகையை அதிகாரிகள் அவிழ்த்து பரிசோதிப்பர். உள்ளாடைகளில் கூட வெடிப் பொருட்களை மறைத்துக்கொண்டு செல்லலாம் என்பது சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தெளிவுப்படுத்தும் வேளையில், சீக்கியர்களின் தலைப்பாகையை மட்டும் சந்தேகத்துடன் பார்ப்பது, கடுமையான பாரபட்சமாகும் என சீக்கிய அமைப்புகள் கூறுகின்றன.

தலைப்பாகையில் ஏராளமான மடக்குகள் இருப்பதால் வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் மறைத்து வைத்தால் ஸ்கேனர்களில் அதனை கண்டறிய இயலாது என டி.எஸ்.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

Add Comment