துபாயில் தமிழக தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.

துபாயில் தமிழக தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் கலைச்சங்கமம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சி. சுப்ரமணியம் மற்றும் பி. கக்கன் ஆகியோரது நூற்றாண்டு விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகை புரிந்த கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் 05.11.2010 வெள்ளிக்கிழமை தொழிலாளர் முகாம்களில் உள்ள தமிழக தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

தொழிலாளர் முகாமுக்கு வருகை புரிந்த அவருக்கு அவரது தொகுதியான கடையநல்லூர் மற்றும் தென்காசி பகுதி பணியாளர்கள் மலர்க்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பளித்தனர்.

Bactrim No Prescription style=”text-align: justify;”>பணியாளர்களின் கோரிக்கைகளை செவியுற்ற சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதோடு, வெளிநாடு வாழ் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான நலவாரியம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கோவா போன்று தமிழகத்திலும் அதற்கான தனி அமைச்சகம் அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப் போவதாக உறுதியளித்தார்.

Add Comment