2 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார் சானியா

குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகளில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தின் எட்பாஸ்டன் நகரில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் சானியா. அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். திருமண வாழ்க்கையும் முக்கியமானது. கணவரை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்கள் வெளியில் இருப்பது கடினமானது. எனவே Lasix online இன்னும் 2 ஆண்டுகளில் நான் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன்.

டென்னிஸ் விளையாட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் சானியா.

முன்னதாக இந்தத் தொடரின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தைவான் வீராங்கனை யங் ஜானை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சானியா தோற்கடித்தார்.

Add Comment