கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா:

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3-2 என ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி, கோப்பை வென்றது.
துபாயில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி துபாயில் நடந்தது. “டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார்.
காலிஸ் அபாரம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித் (14) சுமாரான துவக்கம் தந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா (62), டிவிலியர்ஸ் (61) மற்றும் டுமினி (59) ஆகிய முன்னணி வீரர்கள், அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். “ஆல் ரவுண்டர்’ காலிஸ் 83 ரன்கள் எடுத்து அசத்தினார். தென் Doxycycline online ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது.
உமர் ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹசன் (39), ஹபீஸ் (59) நல்ல துவக்கம் தந்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் சீனியர் வீரர்கள் யூனிஸ் கான் (3), முகமது யூசுப் (3) சொதப்பினர். கேப்டன் அப்ரிதி (24), ரசாக் (39) ரன்கள் மட்டும் எடுத்தனர். உமர் அக்மல் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி, 44.5 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆட்ட நாயகனாக காலிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்ற தென் ஆப்ரிக்க அணி, கோப்பை கைப்பற்றி அசத்தியது. தொடர் நாயகன் விருதை ஆம்லா தட்டிச் சென்றார்.

Add Comment