கடையநல்லூர் கல்யாணம்-செங்கோட்டையன்

சீரான கல்யாணம்.

கல்யாணம் என்றவுடன் பழைய காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன அப்போதெல்லாம் கல்யாண அழைப்பிதழில் நல்ல நேரத்தை குறிப்பிடும்போது இரவு 11 மணிக்கு மேல் காலை 3 மணிக்குள் அல்லது 12 மணிக்கு மேல் 4 மணிக்குள் என்று பிரசுரிக்கப்பட்டிருக்கும். பந்தலுக்கு முக்கியத்தும் கிடையாது ஆனால் மைக்செட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதுபோல் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது அதையெல்லாம் விட மாப்பிள்ளை கார்களுக்கு முன்பு கூட்டமாக வட்டம் போட்டு குழுமி நின்று சினிமா பாடலுக்கு. மறு வார்த்தைகள் புனைந்து சமுதாய சீர்திருத்தம் வேண்டியோ அல்லது நபிகள் நாயகத்தை புகழ்ந்தோ அல்லது வேறு நபி மார்களின் ஒலி மார்களின் அற்புதங்களை புகழ்ந்தோ பாடல்களை இயற்றி பாடல்களை படிப்பார்கள் குறிப்பாக அப்போது நடந்த ஒரு தனி நபரின் போக்கை கண்டித்து எழுதப்பட்ட ஒரு பாடலின் வரிகளை சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.

அப்போதெல்லாம் தறி நெய்வதற்கு தனியார் நூல்களை கொடுத்து துணியை வாங்குவதுபோல் கூட்டறவு சுசைட்டி என்றொரு அமைப்பு இருந்தது அதில் தனி நபர்கள் பணத்தை கையாடல் செய்ததாக செய்தி வெளியாகவே, அந்த நேரத்தில் வெளியான பாடல்களில் ஜெயலலிதா நடித்து முதலில் வெளியான வெண்ணீர்ஆடை என்ற படத்தில் “அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டு பாடும்” என்ற வரியின் பாடலை. “அம்மம்மா கால்பராவில் நஞ்சை வந்ததென்ன கங்கானம் பார்க்க காரில் ஏற காசு வந்ததென்ன” என்று படிப்பார்கள் அதாவது கால்பராவ் என்று மேலக்காட்டில் ஒரு விளை நிலத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்

இப்படி பாடல்களை எழுதி மனப்பாடம் செய்து மாப்பிள்ளை ஊர்வலத்தில் மனப்பாடம் செய்யப்பட்ட பாடலை அரங்கேற்றம் செய்யும்போது ஊரிலுள்ள மேலகட்சி கீழகட்சி சங்கங்களுக்குள் கடுமையான போட்டிகள் போறாமைகள் ஏற்படும் சில நேரங்களில் சங்ககங்களுக்குள் அடிதடி சண்டையெல்லாம் நடந்திருக்கிறது. குறிப்பாக மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளை ஜோடித்து காரில் ஏறியவுடன் முதலாவதாக எங்கள் சங்கம்தான் முதலில் பாடவேண்டும் என்று பிரச்சினைகள் ஏற்படும்.

முதலில் பாட்டுமட்டும் படித்தார்கள் பிறகு கொட்டு தட்டினார்கள். பிறகு சிங்கியடித்தார்கள். பிறகு கிலுக்கு குலுக்கினார்கள் சிலம்பாட்டம் போட்டார்கள் கோலாட் எனப்படும் கழியல் அடித்தார்கள். பிறகு கழியலுடன் கூடிய கலர் கலராய் ஆன கயிறுகளை பின்னப்பட்டு எடுத்தார்கள். இப்படியாக நமது கடையநல்லூpல் மட்டுமில்லாமல் காயல்பட்டிணம் தஞ்சாவூர் என்றெல்லாம் சென்று புகழ் பெற்று வந்தார்கள்.

தமிழில் பாட்டுப்பாட ஆரம்பித்து ஹிந்திப்பாட்டும் படித்தார்கள் இன்னும் சொல்லப்போனால் மராட்டியப் பாடல்வரை நம் ஊரில் பாடப்பட்டது. அப்போது பாம்பேயில் குடியிருந்த நம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தார் வீட்டில் கல்யாணம் நடந்தபோது அந்த குடும்ப நண்பர்கள் பலர்; வந்திருந்தார்கள். பாம்பேயை சார்ந்தவர்களும்; மராட்டியக்காரர்களும் அந்த கல்யாணத்திற்காக நம் ஊருக்கு வந்திருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் வெளியான பிஞ்ரா என்ற மராட்டியப்படத்தில் பெரும் ஹிட்டான “திஸ்லா ஏ பாய் திஸ்லா” என்ற மராட்டியப்பாடல் ஒன்றை அங்கு அரங்கேற்றி அணைவரையும் வியப்பிலாழ்த்தினார்கள். அதுமட்டுமில்லை, சங்கங்களுக்குள் போட்டிபோட்டு பாட்டுபாடிவரும் சூழ்நிலையில் ஒரு சங்கத்தை சார்ந்தவர்களில் கொட்டு தட்டுபவருக்கு கல்யாணம் நடந்தது. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அப்போது பாடலுக்கு கொட்டுத்தட்டினார். பாடலுக்கு தகுந்தவாறு கொட்டின் தாளம் சரியாக வராததால். மாப்பிள்ளை உடனே மாலையை கழற்றி காரில் வைத்து விட்டு கீழே இறங்கி வந்து அந்த பாடலை திரும்ப முதலில் இருந்து பாடச்சொல்லி பாட்டு முடியும்வரை பாட்டுக்கு ஏற்றவாறு கொட்டுதட்டி ஏகோபித்த கைதட்டலை பெற்று மீண்டும் காரில் ஏறி மாலையை மாட்டிக்கொண்டார் என்றால் எந்தளவுக்கு மாப்பிள்ளை ஊர்வலத்தில் பைத் என்ற பாடல்களுக்கு ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்?.

ஒரு தெருவிலோ, அல்லது ஒரு வட்டாரத்திலோ கல்யாணம் என்றால். அந்த வட்டாரம் மட்டுமில்லை அந்த தெருவும் மட்டுமில்லை மாப்பிள்ளை ஊர்வலம் எந்த தெருவில் எல்லாம் வருகிறதோ அந்த தெருவில் எல்லாம் விழித்திருப்பார்கள். பஞ்சமான நேரமென்றாலும் இரவு நேரங்களில் நடக்கும் திருமணத்திலும், விருந்து உபசரிப்புகளிலும் அழுத்தம் இருந்தது ஆர்வம் இருந்தது. மாப்பிள்ளை ஊர்வலத்தை ஆனாச்சாரமான செலவு என்று நிறுத்தி விட்டார்களா? அல்லது வெளிநாடு செல்கிற மோகத்தில் ஆளில்லாமல் விட்டு விட்டார்களா, என்று தெரியவில்லை! ஒரு வேளை இரண்டும் காரணமாக இருக்கலாம்.

இன்றைய ஒரு சில இளைஞர்கள் கல்யாணத்தின்போது ஆடம்பரமான செலவுகளை விரும்புவதில்லை என்றாலும் அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்தே ஆடம்பரம் துவங்கி விடுகிறது. இப்பொழுது நடக்கும் கல்யாணங்களை எடுத்துக்கொண்டால் அழைப்பிதழ்களிலே சிலர் பணத்தை பணமென்று பாராமல் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்டமாக அச்சிட்டு அழைப்பு வழங்குகிறார்கள். சிரிது நேரத்தில் படித்தும் படிக்காமலும் பாழ்படுத்தப்படும் அந்த அழைப்பிதழ்களைப்பற்றியும் அதற்காக அவர்கள் செலவு செய்த தொகையைப்பற்றியும் நினைக்கும்போது வருத்தப்பட தோன்றுகிறது.

கல்யாணத்திற்காக ஒருநாள் மட்டும் தெருவில் அண்டா போட்ட நிலை மாறி இப்போது வாளிச்சோறுக்கு ஒருநாள் அண்டா. கல்யாண விருந்துக்கென்று இரண்டாம் நாள் அண்டா என்ற நிலையில் வந்து விட்டது போகிற போக்கைப்பார்த்தால் மீன் சாப்பாடு என்ற பெயரில் மூன்றாவது நாளும் அண்டா போடுகிற நிலை உண்டாகிவிடும்போல் தெரிகிறது.

கல்யாணத்தை சிக்கனமாக செய்வதில் பரக்கத்து உண்டு என்று சொல்லிக்கொள்ளும் நம்மவர்களிடம் இப்போது புதிய புதிய சீரழிவுகள் வரத்துவங்கிவிட்டது மாலை வேண்டாம் தொப்பி வேண்டாம் நிக்காஹ் சொல்ல ஆலீம்கள் வேண்டாம் அதையெல்லாம்விட பணம் வேண்டாம் என்று சொல்வதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது

அதைப்போல்;; அதிக விலையலான அழைப்பிதழ் வேண்டாம் ஆடம்பர பந்தல் வேண்டாம் பந்தலில் பிறரை வசைபாடுகிற சொற்பொழிவு வேண்டாம் வாளிச்சோறு வேண்டாம் மறைவாக வாங்கும் சீர்வரிசை வேண்டாம் என்று சொல்வார்களா? மேலும் நாளுக்கு நாள் புதியதாக விளைந்து கொண்டிருக்கிற வீனான அனாச்சாரங்களிலிருந்து நம் Cialis No Prescription சமுதாயத்தை திருமறை காட்டிய சீரான கல்யாணத்திற்கு இட்டுச்செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் நம் அணைவரையும் நேர் வழியில் நடத்துவானாக.. நம் அனைவரையும் பாதுகாப்பானாக..

-செங்கோட்டையன்

Add Comment