ஐ.சி.சி., ரேங்கிங்: இந்தியா 3வது இடம்

ஒருநாள் அணிகளுக்கான ரேங்கிங்(தரவரிசை) பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரண்டாவது இடத்தை இலங்கை அணி பிடித்துள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சேவக் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் அணிகளுக்கான புதிய ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி 128 புள்ளிகளுடன், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக கோப்பை வென்ற இலங்கை அணி, 3 புள்ளிகள் அதிகம் பெற்று( 118), இரண்டாவது Buy Levitra இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி(117 புள்ளி) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
மீண்டும் இரண்டாவது இடத்தை பிடிக்க இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வெல்ல வேண்டும். அப்போது 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடிக்கலாம். மாறாக 4-1 என, வென்றால், தசம புள்ளி வித்தியாசத்தில் தொடர்ந்து மூன்றாவது (118) இடம் தான் கிடைக்கும்.
தென் ஆப்ரிக்க அணி (115) நான்கு மற்றும் பாகிஸ்தான் (100) ஆறாவது இடத்தில் உள்ளன. ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து (112) உள்ளது.
சேவக் முன்னேற்றம்:
ஒரு நாள் போட்டிக்கான, பேட்ஸ்மேன்கள் ரேங்கிங் பட்டியலில் தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா(854 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் சேவக்(713 புள்ளி) ஒரு இடம் முன்னேறி, 7வது இடத்தை பெற்றுள்ளார். சச்சின்(711 புள்ளி) 8வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் தோனி(786 புள்ளி) நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
பவுலர்கள் பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலிடத்தில் தொடருகிறார். இதன் “டாப்-10′ பட்டியில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை. பிரவீண் குமார் 11 மற்றும் ஹர்பஜன் 15வது இடத்தில் உள்ளனர்.

Add Comment