ஜித்தா விமான நிலையத்தில் ‘தம்’ அடித்தால் ரூ. 2400 ‘ஃபைன்’

ஜித்தா  விமான நிலயைத்தில் புகை பிடித்தோரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து தலா ரூ. 2400 அபராதத் தொகையை வசூலித்தனர்.

சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு  நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

முதல் நாளிலேயே தடையை மீறியதற்காக 12 பேர் பிடிபட்டனர். ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் புகை பிடித்ததற்காக, அவர்களிடமிருந்து Buy cheap Bactrim தலா 200 ரியால் (இந்திய மதிப்பில் ரூ. 2400) அபராதமாக வசூலிக்கப்பட்டது.

புகை பிடிப்பவர்கள் குறித்த தகவலை சவூதி உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ளது. அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தடை குறித்த விவரத்தை அனுப்பியுள்ளனராம்.

மேலும் சுற்றுலா ஏஜென்சிகள், அரசு [^] த் துறையினர் மூலமும் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரைக்கு வந்துள்ளவர்களுக்கு இந்த தடை தெரிய வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் புகை பிடித்தால் புகை பிடிக்கக் கூடாது என்று தடுக்க மட்டும் செய்யப்படுவர். மாறாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் இங்கு மீண்டும் வரும்போது புகை பிடித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரசு கூறியுள்ளது.

விமான நிலையம் தவிர வணிக வளாகங்களிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment