குற்றாலத்தில் சீசன் களை கட்டியது – ஆர்ப்பரிக்கும் அருவிகள்

குற்றாலம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. அனைத்துஅருவிகளிலும் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பெட் புயல் குறுக்கீடு காரணமாக தென் மேற்குப் பருவ மழையில் சற்று சுணக்கம் ஏற்பட்டதே இதற்குக் காரணம்.

இந்த நிலையில் நேற்று மாலையில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நல்ல குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. சாரல் மழையும் பெய்ய ஆரம்பித்தது.

இன்று அதிகாலை முதல் குற்றாலத்தில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்புடன் கொட்டத் தொடங்கியது. இதனால் குற்றாலத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குதூகலத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

சீசன் தொடங்கியிருப்பதால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Buy Cialis Online No Prescription alt=”” width=”573″ height=”216″ />

Add Comment