கடையநல்லூரில் இ.யூ.முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு விழா மற்றும் கொடியேற்று தின விழா

கடையநல்லூரில் இ.யூ.முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு விழா மற்றும் கொடியேற்று தின விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தின விழா மற்றும் கொடியேற்று தின விழா 10-03-2012 அன்று மாநில முஸ்லிம் லீக் அறிவுறுத்தலின்படி கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மாவட்டச் செயலாளரும், நகர முஸ்லிம் லீக் தலைவர் டி.ஏ. செய்யது முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் வாகன பேரணியாக சென்று நகரில் உள்ள வார்டு எண். 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 28, 29, 30, 32 ஆகிய வார்டு கொடி கம்பங்களிலும் சார்சங்கங்களான உதுமானியா முஸ்லிம் சங்கம், கமாலியா முஸ்லிம் சங்கம் , ஸைபுல்லாஹ் இஸ்லாம் சங்கம், ஜின்னா வாலிபர் சங்கம், காயிதெ மில்லத் மன்ஸில், சிராஜுல் இஸ்லாம் சங்கம், தாருல் உலூம் பிலால் மஜ்லிஸ், ஜக்கரியா நற்பணிமன்றம் தாஜுல் இஸ்லாம் சங்கம், தீனூல் இஸ்லாம், பாரடைஸ் ஆகிய சங்க அலுவலகங்களிலும் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி எற்றப்பட்டது.

Amoxil No Prescription wp-image-23733″ />

இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.இ. அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, மாவட்ட எம்.எஸ்.எஃப். அமைப்பாளர் எம்.பி., ஸைபுல்லா, நகரச் செயலாளர் கே.எம். அப்துல் லத்தீப், பி.ஏ. செய்யது மசூது, நகர துணைச் செயலாளர்கள் பி.ஏ. பக்கீர் மைதீன், எம்.கே. அப்துல் காதர், கே.எஸ். சேகனா, நகர மன்ற உறுப்பினர்கள் கே.எம். செய்யது மசூது, ஓ.கே. முஹம்மது இப்ராஹீம், கே.எம். அப்துல் லத்தீப், எஸ்.எஸ். முபாரக், எம். முகைதீன் பாத்திமா, கே.ஆர். சுலைகா, நகர இளைஞர் அணி தலைவர் கே.எம். ரஹ்மத்துல்லா, விஸ்வா கபீர், பி.கே. காஜா மைதீன், பி.யூ. அப்துல் ஹக்கீம் மற்றும் நகர, இளைஞர் அணி, மாணவர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,
க.கா.செ
கடையநல்லூர்

Add Comment