ஹைதருக்கு ஆதரவு அளிக்க பாக்., மறுப்பு

சூதாட்ட கும்பலால் மிரட்டப்பட்ட ஹைதரின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இவரது சம்பள ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) அதிரடியாக ரத்து செய்தது. தவிர, இங்கிலாந்தில் தஞ்சம் தேடும் இவரது முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.
பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர், லார்ட்ஸ் டெஸ்டில் “ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதால், இவர்களை ஐ.சி.சி., “சஸ்பெண்ட்’ செய்துள்ளது. இந்நிலையில் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜல்கர்னைன் ஹைதரும் (24), சூதாட்ட கும்பலிடம் சிக்கியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபடுமாறு மிரட்டப்பட்டுள்ளார். இதற்கு மறுத்த ஹைதர், அணியில் இருந்து விலகி, லண்டன் சென்றார். அங்கு சென்ற பின்பும் இவருக்கு கொலை மிரட்டல் தொடர்ந்தது. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
தற்போது ஹைதருக்கு அவரது சொந்த நாட்டிலேயே ஆதரவு இல்லை. இவரது சம்பள ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தஞ்சம் தேடும் முயற்சிக்கும் ஆதரவு இல்லை. சக வீரர்களும் இவரது செயலை கண்டித்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இஜாஜ் ஹுசைன் ஜக்ரானி கூறியது:
ஹைதருக்கு மிரட்டல் வந்திருந்தது என்றால், அவர் முதலில் எங்களிடம் வந்திருக்க Levitra No Prescription வேண்டும். அவர் தேசிய அணி நிர்வாகம் அல்லது பி.சி.பி., மீது நம்பிக்கை வைக்கவில்லை. இந்தளவுக்கு பலவீனமான, பயந்த வீரர் என்றால் அவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க கூடாது. குறிப்பாக தேசிய அணியில் விளையாட வந்திருக்க கூடாது.
நாங்கள் பி.சி.பி.,யின் நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை. இவரது நடவடிக்கை எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஹைதருக்கு உதவிகள் தேவை என்றால் எங்களிடம் வரலாம். ஆனால், லண்டனில் அரசியல் தஞ்சம் அடைய இருக்கும் நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் அரசு ஆதரவு தராது.
இவ்வாறு ஜக்ரானி கூறினார்.
அனுபவ வீரர் அப்துல் ரசாக் கூறுகையில்,””ஏதாவது பிரச்னை என்றால் சீனியர் வீரர்கள் அல்லது அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கலாம். அதைவிடுத்து, திடீரென அணியை விட்டு விலகிச் சென்ற ஹைதரின் முடிவு சரியாக படவில்லை. அவர் பெரும் தவறு செய்துள்ளார். அவர் இளம் வீரர் என்பதால், அணிக்கு எதிர்காலத்தில் எந்த இழப்பும் ஏற்பட போவதில்லை,” என்றார்.
மானேஜர் தவறு:
முன்னாள் தலைமை அதிகாரி ஆரிப் அபாஸ் கூறுகையில்,”” சீனியர் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை நம்பாமல், ஹைதர் செய்தது மிகவும் அதிர்ச்சி தருகிறது. தொடரின் இடையில் வீரரின் பாஸ்போர்ட்டை, மானேஜர் எப்படி கொடுத்தார் என்பது தான் தெரியவில்லை,” என்றார்.
ஏற்கனவே மிரட்டல்:
இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த உள்ளூர் தொடரிலேயே, ஹைதர் மிரட்டப்பட்ட விவகாரம் இப்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து “தி கார்டியன்’ பத்திரிகையில் வெளியான செய்தி:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் ஆர்.பி.எஸ் கோப்பை தொடர் நடந்தது. இதில் லாகூர் ஈகிள்ஸ் அணியின் கேப்டனாக ஹைதர் இருந்தார். அப்போது நேஷனல் பாங்க் அணிக்கு எதிரான போட்டியில் உஸ்மான் சர்வார் என்ற வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என, சூதாட்டக்காரர்கள் ஹைதரிடம் வலியுறுத்தினர். இதற்கு முன் அணியில் விளையாடாத வீரரை எப்படி சேர்ப்பது என மறுத்துள்ளார். இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை கமிட்டி
ஹைதர் விவகாரம் குறித்து விசாரிக்க சுபான் அகமது தலைமையிலான மூன்று நபர் கமிட்டியை பி.சி.பி., அமைத்துள்ளது. இது, ஹைதர் எந்த சூழ்நிலையில் ஓட்டலை விட்டு சென்றார், ஏன் அப்படி செய்தார் உள்ளிட்ட முழு விபரங்களையும் விசாரிக்க உள்ளது.

Add Comment