பட்ஜெட் அறிக்கை : அரசு பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு

சென்னை Monday -26 :
மேலும், சில அறிவிப்புகள், தமிழக உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும். ஆண்டு தோறும் 1,000 தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க திட்டம். தமிழகம் முழுவதும் உள்ள 1,500 கிலோமீட்டர் நீளம் உள்ள சாலைகளை அகலப்படுத்த ரூ.740 கோடி ஒதுக்கீடு. சாலை பராமரிப்புக்கு ரூ.1,180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3,000 புதிய பேருந்துகள் வங்க ரூ.548 கோடி ஒதுக்கீட்டு.  அனைத்து அரசு பேருந்துகளிலும் மின்னணு பயணச் சீட்டு வழங்க வரும் ஆண்டுக்குள்  நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல்லுயிரின பாதுகாப்புக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி buy Ampicillin online ஒதுக்கீடு.

குடிசை வீடுகளுக்கு பல்பு
தமிழகத்தில் குடிசை வீடுகளில் இழை மின் விளக்கு பதிலாக ரூ.14 .62 கோடி செலவில் 1462 லட்சம் குடிசைவீடுகளுக்கு சி.எப்.எல் பல்ப் வழங்கத் திட்டம். தமிழக அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.அடிப்படை வசதியில்லாத குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60,000 வீடுகளுக்கு சூரிய மின் விளக்கு வழங்க ரூ.180 கோடி ஒதுக்கீடு. 20000 தெருவிளக்குகளுக்கு  ரூ.50 கோடி செலவில் சூரிய ஒளி மின்சக்தி வழங்கப்படும். வீடு விலை குறைவதற்கு வீட்டு கட்டுமான தரப்பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும். தரப்பரப்பளவு குறியீடு குறைவால் வீட்டு விலை குறையும்.

-dinakaran

Add Comment