முதல்’ டெஸ்டில் பங்கேற்கும் லட்சுமண்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் லட்சுமண், தனது சொந்த மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார் லட்சுமண். இந்த ஆண்டு பங்கேற்ற 7 டெஸ்டில் இவர் 704 ரன்கள் குவித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் போதெல்லாம், தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது இவரது சிறப்பம்சம்.
லட்சுமண், இதுவரை சர்வதேச அளவில் 115 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில், ஒரு முறை கூட இவரது சொந்த ஊரான ஐதராபாத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை. கடைசியாக இங்கு கடந்த 1988ல் டெஸ்ட் போட்டி நடந்தது. ஆனால், லட்சுமண் 1996ல் தான் அறிமுகமானார்.
தற்போது இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கான்பூரில் தான் நடக்க இருந்தது. பின் உலக கோப்பை போட்டிக்காக, ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டு, தயாராக உள்ள ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. 22 ஆண்டுகளுக்குப் பின், இங்கு நாளை துவங்கும் போட்டியில் லட்சுமண் பங்கேற்பதன் மூலம், இவரது நீண்ட கால கனவு நிறைவேறுகிறது.
இதுகுறித்து லட்சுமண் கூறியது:
பொதுவாக ஐதராபாத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது சொந்த ஊரான இங்கு, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது, சற்று மனவேதனையாகத்தான் இருந்தது. சச்சின் மும்பையிலும், டிராவிட் பெங்களூரிலும், டில்லியில் சேவக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
வீரர்களின் கனவு:
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தனது சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுக்கு இடையே போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இங்குள்ள லால்பகதூர் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளேன். ஆனால், முதன் முறையாக சொந்த மண்ணில் இப்போது தான் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
நினைவில் நிற்கும்:
எனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியவர்கள் அனைவரும் எனது ஆட்டத்தை பார்வையிட வருவார்கள். இது வித்தியாசமான அனுபவத்தை தரும். போட்டியில் என்ன நடக்கும் என இப்போது தெரியாது. என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.
டெய்லர் நம்பிக்கை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் குறித்து நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கூறுகையில்,””ஆமதாபாத் டெஸ்டில் எங்கள் அணியின் செயல்பாடு மகிழ்ச்சி தருகிறது. இதனால் ஐதராபாத் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை Buy Lasix <உள்ளது. “பவுன்சர்’ எடுபடும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும். இது மார்டின் சிறப்பாக பவுலிங் செய்ய உதவும்.
இம்முறை தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதன் இந்திய அணிக்கு நெருக்கடி தருவோம். இப்போட்டியில் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்,”என்றார்.

Add Comment