ஈரானுடன் உலக வல்லரசுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை

அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளுடன் ஈரான் நடத்தும் அணுசக்தித் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் துருக்கியில் வைத்து நடைபெறும் என துருக்கி அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனியுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கடந்தவாரம் ஈரான் வெளியுறவுத்துறை Cialis No Prescription மனுஷஹர் முத்தகி தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரியா நாட்டு தலைநகரமான வியன்னாவில் இந்த மாதம் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியான பிறகும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்சனையை தூதரக மட்டத்தில் பரிசிலீக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உறுப்பு நாடாகவிருக்கும் துருக்கி ஈரானுடன் நெடுங்காலமாக நட்புறவை பேணி வருகிறது. அதனால்தான் பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment