ஷார்ஜா தமுமுக நிர்வாகியின் கால்கள் விபத்தில் துண்டிப்பு துயரத்தில் துயரம்!

தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் பட்டினம் என்ற ஊரைச் சார்ந்த முஹம்மது ஜபருல்லாஹ் என்ற இளைஞர் ஷார்ஜாவில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஷார்ஜா தமுமுகவின் நிர்வாகியாக கடந்த ரமலானில் பொறுப்பேற்றார். மார்க்கப்பற்றும், சமுதாய உணர்வும் கொண்ட அந்த சேவகர் கடந்த மாதம் நடந்த கோர விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துவிட்டு மருத்துவ உதவிக்காக தவித்துக் கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற சமுதாய உணர்வு உள்ளவர்களுக்கு உதவுவது சமுதாய கடமையாகும். இந்த விபத்தின் காரணமாக அவரது திருமணமும் ரத்தாகியுள்ளது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த சகோதரருக்கு துஆ செய்வோம்.

பொருளாதார உதவியை செய்பவர்கள் இவரது தங்கையின் வங்கிக் கணக்கிற்கு உங்களுடைய பங்களிப்பை அனுப்பலாம்.

பெயர் : ரஜபுன்னிஸா
கணக்கு எண் : 11205
வங்கி : இந்தியன் வங்கி
மல்லிப் பட்டிணம் கிளை, தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா

துபாயில் உள்ளவர்கள் 055-6800275 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு Buy Viagra இவருக்கு பொருளாதார உதவியை அளிக்கலாம்.

Add Comment