ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தென்னிந்திய ஹஜ், உம்ரா பயணிகள் நலச்சங்கத் தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஹஜ் பயணிகள் சில வசதிகளை விரும்பி தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக புனித ஹஜ் பயணம் செல்வது வாடிக்கை. அகில இந்திய அளவில் தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த பயண ஏற்பாட்டாளர்களுக்கு கடந்த ஜுன் மாதமே மத்திய அரசின் `கோட்டா’ ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது பற்றி முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டது. இதற்கு மேல் `கோட்டா’ கிடையாது என்பதை தெரிந்திருந்தபோதிலும், வேண்டும் என்றே சிலர், தாங்களும் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் Buy Bactrim Online No Prescription என்றும், எங்களுக்கும் `கோட்டா’ இருக்கிறது என்றும் கூறி ஹஜ் பயணிகளிடம் பணத்தை பெற்றுள்ளனர். மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டிலும் ஹஜ் பயணிகளை ஏமாற்றியவர்கள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Add Comment