வேலைவாய்ப்பு கடனுதவி பெற நவ.20க்குள் விண்ணப்பிக்கலாம் * மாவட்ட தொழில் மையம் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் வேலையில்லா இளையோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுபவர்கள் வரும் 20ம்தேதிக்குள் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராஜராஜன் அறிக்கை: “வேலையில்லா இளையோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ என்ற பெயரில் புதிய தொழிற்கடன் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிகப்பட்ச திட்ட மதிப்பீடு 5 லட்சம் ரூபாய் வரையுள்ள உற்பத்தித்தொழில்கள், 3 லட்சம் ரூபாய் வரையுள்ள சேவைத்தொழில்கள், 1 லட்சம் ரூபாய் வரையுள்ள வியாபாரத்தொழில்களுக்கு பாங்குகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

Cialis No Prescription style=”text-align: justify;”>இத்திட்டத்தில் பயன் பெற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2010-11ம்ஆண்டுக்கு இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 25ம்தேதி காணிகுடியிருப்பு, 26ம்தேதி தென்காசி பஞ்., யூனியன் அலுவலகம், 30ம்தேதி மாவட்ட தொழில் மையம், டிசம்பர் 3ம்தேதி சங்கரன்கோவில் பஞ்., யூனியன் அலுவலகம், 14ம்தேதி வள்ளியூர் பஞ்., யூனியன் அலுவலகத்தில் நடக்கும் நேர்காணல்களில் விண்ணப்பங்கள் பரிந்தரை செய்யப்படவுள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பாளை. ஐகிரவுண்ட் ஏ.ஆர்.லைன் ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் இலவச விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 20ம்தேதிக்குள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு நேரில் அல்லது தபாலில் அளிக்கலாம்.
இவ்வாறு பொது மேலாளர் ராஜராஜன் தெரிவித்தார்.

Add Comment