வலது பக்கம் இதயம் உடைய அதிசய பெண் – சென்னையில் அறுவை சிகிச்சை நடந்தது

மனிதனின் உடலில் இதயம் முக்கியமான உறுப்பு ஆகும். ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பும் முக்கியமான வேலை செய்கிறது. நாம் உறங்கினாலும் இது தூங்காது. 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும்.

மூளை உள்பட மற்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்துக்கு ஓய்வு கிடையாது. அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக உள்ளது. இதயமானது மனிதனுக்கு இடது பக்கம்தான் இருக்கும்.இதுதான் இறைவனின் படைப்பு. ஆனால் சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு இதயம் மட்டுமல்ல வலதுபுறம் இருக்க வேண்டிய கல்லீரல் குடல் போன்ற பாகங்கள் இடதுபக்கமாகவும், இடதுபுறம் இருக்கவேண்டிய உறுப்புகள் வலது புறமாகவும் மாறி இருக்கிறது.

இந்த அதிசயப் பெண்ணின் பெயர் இந்திரா (வயது 58).கணவர் பெயர் அழகுவேல்.பெரம்பூர் ஆனந்தவேல் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அழகுவேல் ராணுவத்தில் பணியாற்றி 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக இந்திராவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி, மயக்கம், சோர்வு ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரிகளில் காட்டியபோது அவர்கள் இது ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும், நிறைய செலவாகும் என்று கூறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்திராவை கடந்த 25-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.அப்போது அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் உள்ளிட்ட பாகங்கள் வலது பக்கத்திலும், வலது பக்கம் இருக்க வேண்டிய கல்லீரல், குடல் உள்ளிட்ட பாகங்கள் இடது பக்கத்திலும் இருப்பதை ஸ்கேன் மூலம் அறிந்தனர் இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

மறுநாளே (26-ந்தேதி) இந்திராவுக்கு ஆபரேஷன் செய்ய அரசு மருத்துவமனை டீன் கனகசபை ஆலோசனை வழங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை கூடுதல் பேராசிரியர் டாக்டர் மீனாட்சி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இடது பக்கம் இதயம் இருந்தால் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்களோ, அதுபோல் வலது பக்கத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து அடைப்புகளை சரிசெய்தனர். பின்னர் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குணம் அடைந்த இந்திரா இன்று காலை பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி இந்திராவின் கணவர் அழகுவேல் கூறியதாவது:-

எனது மனைவிக்கு வலது பக்கம் இதயம் இருப்பதாக டாக்டர்கள் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஏற்கனவே 1982-ல் ஒருமுறை இந்திராவுக்கு பெரம்பூர் அகரம் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது என் மனைவி இந்திராவுக்கு வலது பக்கத்தில் இதயம் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்கள்.
அதனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது என் ஞாபகத்தில்கூட இல்லை.

இப்போது அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சொன்னபோதுதான் எனக்கு மாநகராட்சி டாக்டர் ஏற்கனவே சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தற்போது இதயத்தில் உள்ள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பேஸ்மேக்கர் கருவி பொருத்தி இருக்கிறார்கள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததற்கு டாக்டர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு டாக்டர்கள் கூறும்போது, buy Amoxil online இதுபோல் கோடி பேரில் ஒருவருக்குத்தான் அதிசயமாக உடல் உறுப்புகள் மாறி இருக்கும். அதனால் உயிருக்கு ஆபத்து வராது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு ஸ்கேன் செய்து பார்க்கும்போதுதான் தெரிய வரும் என்றனர்.என்னே இறைவனின் படைப்பு !…..
thanks to malaimalar

தகவல்,
க.கா.செ.
கடையநல்லூர்

Add Comment