சவுதி அரேபியா நிறுவனத்தில் பணி : 16ம் தேதி “இன்டர்வியூ’

சவுதி அரேபியா முன்னணி நிறுவன பணியிடங்களுக்கு நாகர்கோவிலில் வரும் 16ம் தேதி இன்டர்வியூ ஆரம்பமாகிறது.தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிறைவான ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்படும்.எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து போட்டோக்களுடன் டைப் செய்யப்பட்ட Buy Lasix Online No Prescription சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் ஐ.டி.ஐயில் வரும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.இதுசம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய 044 – 24464209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ்மிஸ்ரா அறிவித்துள்ளார்.இவ்வாறு மாவடட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்துள்ளார்.

Add Comment