முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) கட்டுரைப் போட்டி

முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) நடத்திய கண்மணி நாயகம் (ஸல்) பிறந்த நாள் கட்டுரைப் போட்டி – 820 மாணவ மாணவியர் பங்கேற்றனர்

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளையொட்டி மாநிலம் தழுவிய அளவில் கல்லூரி மாணவ மாணவியரிடையே கட்டுரைப் போட்டியை முஸ்லிம் மாணவர் பேரவை நடத்தியது. இதில் 820 பேர் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் பாம்புக் கோவில் சந்தை ஏ.செய்யது பட்டாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் ஸ்டூடன்ட்ஸ் ஃபெடரேஷன் (எம்.எஸ்.எஃப்) வருடம் தோறும் நான்கு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாள் கட்டுரை போட்டியும் ஒன்றாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித குலத்தின் மகத்தான தலைவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற் பண்புகளின் தாயகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத் திற்கோர் அருட்கொடை என்ற மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

கட்டுரை ஏ4 அளவில் பதினாறு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் பிப்ரவரி 29க்குள் அனுப்பித்தர வேண்டும் எனவும் அறிவிக் கப்பட்டிருந்தது. எம்.எஸ்.எஃபின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதிலிருந்து 820 மாணவ மாணவியர் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பியுள்ளனர். இதில் ஏராளமானோர் முஸ்லிம் அல்லாத பிற சமயங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணாபுரம் திருமலை பொறியியல் கல்லூரி, கொரட்டூர் பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி, திருவாரூர் ராபியம்மாள் அஹமது மொய்தீன் மகளிர் கல்லூரி, பாபநாசம் ஆர்.டி.பி. கலை அறிவியல் கல்லூரி, மதுரை மு.சா.ச. வக்பு வாரிய கல்லூரி, பெரியகுளம் மேரி மாதா கல்லூரி, பாளையங் கோட்டை சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரி, மன்னார்குடி ஏ.ஆர்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மறைமலை நகர் ஏ.ஆர்.எம். பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சேலம் அரசு பொறியியல் கல்லூரி.

கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி, தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, காஞ்சிபுரம் ஜெய் மாதாஜி பொறியியல் கல்லூரி, மீஞ்சூர் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரி, எர்னாபுரம் சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு கலைக் கல்லூரி, திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ராஜமடம் அண்ணா தொழில் நுட்ப கல்லூரி, காயல்பட்டினம் வாவு வஜிஹா வனிதையர் கல்லூரி, ஆரணி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமரகோபால் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரி, கிழம்பி எஸ். எஸ்.கே.வி. கலை மற்றும் அறிவியல் Buy Lasix கல்லூரி, சென்னை எம்.ஜி,ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ. காட்டூர் முஹம்மது சதக் ஏ.ஜே. பொறியியல் கல்லூரி, கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி, உத்தமகாளையம் கருத்த ராவுத்தர் கௌஸியா கல்லூரி, தஞ்சை நிஸ்வான் மகளிர் கல்லூரி, கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரி, மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழகம், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம், மேல்ரோசபுரம் சி.எஸ்.ஐ, இவாரிஸ் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, இளையாங்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, திருச்செங்கோடு விவே கானந்தா பொறியியல் மகளிர் கல்லூரி, செம்பியம் டி. தாமஸ் எலிசபத் மகளிர் கல்லூரி, நாற் றாம்பள்ளி பாரதிதாசர் பொறி யியல் கல்லூரி, திருச்செங் கோடு பூ.சா.கோ. அரகிருஷ்ணம்பாள் மகளிர் கல்லூரி, செங்கல்பட்டு ஆர்.வி.ஜி.கலைக் கல்லூரி, ஒட்டன் சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கவுதிய்யா கல்லூரி, சென்னை புதுக்கல்லூரி, காஞ்சிபுரம் பிச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் இதில் பங்கெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழா கட்டுரைகள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மூன்று தலைப்புகளுக்கு தலா ரூபாய் ஜயாயிரம் வீதம் மூன்று முதல்பரிசுகள், தலா ரூபாய் நான்காயிரம் வீதம் மூன்று, இரண்டாம் பரிசுகள், தலா ரூபாய் மூன்றாயிரம் வீதம் மூன்று மூன்றாம் பரிசுகள் மற்றும் ஐந்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த பரிசளிப்பு விழா எஸ். எஸ்.எஃப் சார்பில் ஜுன் மாதம் நடைபெறும் காயிதெ மில்லத் பிறந்த தின கல்வி தினத்தில் நடைபெறும். வெற்றி பெற்றவர் கள் விவரமும் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றவர் விவரமும் மணிச்சுடர் நாளிதழில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு ஏ.செய்யது பட்டாணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். போட்டிச் செய்தி கடையநல்லூர் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
க.கா.செ.
கடையநல்லூர்

Add Comment