அதிக மின்கட்டணம் வசூலிக்கும் ஹவுஸ் ஓனர்களுக்கு சிறை தண்டனை

 சென்னை: வீடுகளில் சப்-மீட்டர் வைத்து, வாடகைதாரர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஹவுஸ் ஓனர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அவரவர் வசிக்கும் ஏரியாவில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளரே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று வாரியம் கூறியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்வாரியம் மனு செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை முடிந்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கட்டணம் உயர்வு குறித்த அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில், இதுவரை இல்லாத அளவுக்கு 37 சதவீத கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள நிலவரப்படி மொத்தம் 1.80 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு தற்போது 6 பிரிவுகளாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக 75 பைசா வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 75 பைசாவும், 51-100 யூனிட் வரை 85 பைசா, 101- 200 யூனிட் வரை ரூ.1.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்பு மூலம் வீட்டு இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு 0-100 யூனிட் வரை ரூ.1.10, 100 முதல் 200 யூனிட் வரை ரூ.1.80, 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.3.50, 500 யூனிட்டுக்கு மேல் உபயோகப்படுத்துவோருக்கு ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மின் உபயோகத்துக்கு ஏற்ப அடுக்கு முறையில்(சிலாப்) கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த உயர்வை பழைய கட்டணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 37 சதவீதம் அதிகமாகும். இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த உயர்வு மூலம் தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு கூடுதலாக 7,874 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உயர்வு மூலம் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களும், ஏழைகளும் தான். நடுத்தர வர்த்தகத்தினர் சாதாரணமாக மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், மின் விசிறி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு சர்வசாதாரணமாக 500 யூனிட்டை தாண்டும். இவர்கள் இதுவரையில் ரூ.1,010 மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

இந்த புதிய கட்டணம் அவர்களை கடுமையாக பாதிக்கும். இனிமேல், கிடைக்கும் சம்பளத்தில் இவர்கள் மாதாந்திர பட்ஜெட்டை சமாளிப்பது மிகவும் கஷ்டம்.
அப்படி இல்லாத பட்சத்தில்  மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல், பழைய முறைக்கே அதாவது, ஆட்டு உரல், அம்மியை பயன்படுத்தி மாவு மற்றும் மசாலா அரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் சிறுதொழில் 0 முதல் 250 யூனிட்டுக்கு ரூ.3.50, 251-501 யூனிட் வரை ரூ.4, விசைத்தறி 501 யூனிட்டுக்கு மேல் ரூ.4, தொழிற்சாலை ரூ.5.50 (பழைய கட்டணம் ரூ.4), Ampicillin No Prescription அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ரூ.4.50 (ரூ.4), தனியார் கல்வி நிறுவனம் ரூ.5.50(ரூ.4.50), சினிமா, வர்த்தகம் ரூ.7(ரூ.5.50) வரையும் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் மற்றும் குண்டூசி முதல் துணி வரை விலை கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பல மணிநேரம் மின்தடையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சப்-மீட்டர் வசூல் : மின் வாரியம் கடும் எச்சரிக்கை

சப்-மீட்டர் வைத்து கொண்டு, மின்வாரியம் விதித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஹவுஸ் ஓனர்கள் மீது ரூ.1 லட்சம் வரை அபராதம், 2 மாத சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும் அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த பகுதி மின்வாரிய உதவி பொறியாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அவர்கள் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்துவது இல்லை. இனிமேலாவது அவர்கள் இச்சட்டத்தை சரியாக பின்பற்றி, பிடியை இறுக்க வேண்டும் என்று நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை உள்பட நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போர் கதி?

சென்னை போன்ற நகரங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகின்றனர். ஏற்கனவே, வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாகத்தான் வாடகைதாரர்களிடம் இருந்து ஹவுஸ் ஓனர்கள் வசூலித்து வருகின்றனர். தற்போதைய புதிய கட்டண உயர்வு வாடகைதாரர்களை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மெயின் மீட்டர் ரீடிங் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் ஹவுஸ் ஓனர்கள், சப்-மீட்டர்களை பயன்படுத்தும் வாடகைதாரர்களுக்கென தன்னிச்சையாக கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ளும் போக்கு சென்னையில் நிலவுகிறது. இதனால் பல மடங்கு கட்டணம் தர வேண்டிய நிலையில் பரிதாபகதிக்கு ஆளாகியுள்ளனர் வாடகைதாரர்கள்.

-dinakaran

Add Comment