கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிகமான கேள்விகளைக் கேட்ட உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன்!

புதுக்கோட்டை மாவட்டடம் அன்னவாசல் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் ஞாயிறுக்கிழமை (01.04.2012) காலை விபத்தில் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான கட்சியினர் குவிந்தனர்.

ஆலங்குடி தொகுதியில் உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரனுக்கு, சுசீலா என்ற மனைவியும், நபேல், நர்மதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். எஸ்.பி.முத்துக்குமரன் மனைவி சுசீலா அரசு பணியில் உள்ளார்.

முத்துக்குமரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இறுதி பிரச்சாத்தில் இருந்தபோது அவரது தாயார் காலமானார்.

கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே buy Bactrim online இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் எஸ்.பி.முத்துக்குமரன். இவருக்கு வயது 40. கட்சியில் கிளை கழகத்தில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 6 ஆண்டு முன்பிலிருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வந்தார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிகமான கேள்விகளைக் கேட்ட உறுப்பினர் முத்துக்குமரன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

source: Nakkeeran.

Add Comment