உண்ணவும், பேசவும் வரி அதிகரிப்பு இன்று முதல்.

நடுவண் வரவு- செலவு திட்ட  அறிக்கையின்படி இன்று ஏப்ரல் 1 முதல் தொலைபேசிக்கட்டணம், உணவகக் கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை வரி 10% லிருந்து 12 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 2% கூடுதல் வரிமூலம் இந்திய அரசுக்குக் கிடைக்கப்பெறும்  கூடுதல் வருமானம் சுமார் 18,660 கோடிகளாம்.
நடுவண் Buy Cialis Online No Prescription நிதி அமைச்சர் பிராணாப் முகர்ஜி அறிவித்துள்ள வரவு-செலவு அறிக்கையின் படி, தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதி, கூரியர் எனப்படும்  துரிதத்தபால்கள், தனியார் கல்விப் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட சேவைகளுக்கும்   வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று (ஏப்ரல் 1 முதல்) நடைமுறைக்கு வருகிறது.  120 வகையான சேவைகளுக்கு இவ்வாறு சேவைவரி செவ்வையாக கூட்டப்பட்டுள்ளது.

வான்வழிப்பயணம், ஆயுள் காப்பீடு, விளம்பரத்துறை, கடனட்டை வசதி, தனியார் கல்விப் பயிற்சி வகுப்புகள்  ஆகியன சேவை வரிக்கு உட்படும் குறிப்பிடத்தக்கத் துறைகளாகும். எதிர்பார்க்கப்படும் கூடுதல் வருவாய்  சுமார் 18,660 கோடியுடன் சேர்த்து அரசுக்கு இச்சேவை வரிகள் மூலமாகக் கிடைக்க உள்ள மொத்தத் தொகை  1.24 இலட்சம் கோடிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

-inneram

Add Comment