யுவராஜ் சிங் பரிதாபம்: “ஏ’ பிரிவில் இருந்து நீக்கம்

இந்திய வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியலில் “ஏ’ பிரிவில் இருந்த யுவராஜ் சிங், தடாலடியாக “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். “ஏ’ பிரிவுக்கு சுரேஷ் ரெய்னா முன்னேறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) சம்பள ஒப்பந்த பட்டியலில் முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும் ஆண்டில் இவர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி “ஏ’ பிரிவில் உள்ள சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் ரூ. 60 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி சம்பளம் பெற உள்ளனர். இதே போல “பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. “சி’ பிரிவில் உள்ளவர்கள் தொடர்ந்து ரூ. 25 லட்சம் சம்பளம் பெறுவர். தற்போது வீரர்களின் எண்ணிக்கையை 41ல் இருந்து 24 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தவிர, “டி’ பிரிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவில் இடம் பெற்றவர்கள் முன்பு ரூ. 15 லட்சம் சம்பளமாக பெற்று வந்தனர்.
காம்பிர் வாய்ப்பு:
புதிய சம்பள ஒப்பந்த பட்டியலில்(2010–11) “பார்ம்’ இல்லாமல் தவிக்கும் யுவராஜ் சிங் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பெரிதாக சோபிக்காத காம்பிர் மற்றும் டிராவிட் அதே “ஏ’ பிரிவில் நீடிக்கின்றனர். ரன் மழை பொழிந்து வரும் சுரேஷ் ரெய்னா “ஏ’ பிரிவுக்கு முன்னேறியுள்ளார். “டி’ பிரிவில் இருந்த விராத் கோஹ்லி “பி’ பிரிவுக்கு தாவியுள்ளார். “பி’ பிரிவில் இருந்த ரோகித் சர்மா “சி’ பிரிவுக்கு பின்தங்கியுள்ளார். தமிழக வீரர் அஷ்வின், பூஜாரா உள்ளிட்டோர் “சி’ பிரிவில் வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக வீரர் முரளி விஜய் “பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
கார்த்திக் மறுப்பு:
இர்பான், யூசுப் பதான் சகோதரர்கள், தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், மனோஜ் திவாரி, ஆர்.பி.சிங், முனாப் படேல் உள்ளிட்ட வீரர்களுக்கு சம்பள ஒப்பந்தத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 24 வீரர்கள்:
“ஏ’ பிரிவு: சச்சின், தோனி, காம்பிர், சேவக், டிராவிட், லட்சுமண், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், ஜாகிர் கான்.
“பி’ பிரிவு: யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா, நெஹ்ரா, பிரவீண் குமார், விராத் கோஹ்லி, முரளி விஜய், பிரக்யான் ஓஜா.
“சி’ பிரிவு: ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, Buy cheap Amoxil அஷ்வின், ரோகித் சர்மா, பூஜாரா, ரவிந்திர ஜடேஜா, மிதுன், வினய் குமார்.
டெஸ்டுக்கு ரூ. 7 லட்சம்
இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் சம்பளம் அளிக்கப்படும். இதே போல ஒரு நாள் போட்டிக்கு ரூ. 4 லட்சம் மற்றும் “டுவென்டி-20′ போட்டிக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

Add Comment