எழுச்சி பெறுமா இந்திய அணி!: இன்று 2வது டெஸ்ட் ஆரம்பம்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. கடந்த போட்டியில் தப்பிய இந்திய அணியினர், இம்முறை எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. 2வது டெஸ்ட், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
காம்பிர் கவனம்:
ஆமதாபாத் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் (21, 0 ரன்) ஏமாற்றிய துவக்க வீரர் கவுதம் காம்பிர், இம்முறை கவனமாக ஆட வேண்டும். கடந்த முறை சதம் கடந்து அசத்திய சேவக், தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. “மிடில்-ஆர்டரில்’ அனுபவ சச்சின், டிராவிட் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை எட்டலாம்.
ஹர்பஜன் நம்பிக்கை:
சொந்த மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்க உள்ளார் லட்சுமண். ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி திணறிய போது கைகொடுத்த இவர், “டிரா’ செய்ய பெரிதும் உதவினார். இவரது பொறுப்பான ஆட்டம் ஐதராபாத்தில் தொடரும் பட்சத்தில், வெற்றியை பதிவு செய்யலாம். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. டெஸ்ட் அரங்கில் முதல் சதம் கடந்து அசத்திய ஹர்பஜன் சிங், தனது அபார ஆட்டத்தை தொடர வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் ஜாகிர் கான் நம்பிக்கை அளித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா உள்ளிட்ட வேகங்கள் கைகொடுத்தால் நன்றாக இருக்கும். கடந்த போட்டியில் சுழலில் ஏமாற்றிய ஹர்பஜன் சிங், பேட்டிங்கில் ஆறுதல் அளித்தார். இருப்பினும் பிரக்யான் ஓஜா சுழலில் துல்லியமாக பந்துவீசியதால் பாதிப்பு ஏற்படவில்லை.
வில்லியம்சன் அபாரம்:
நியூசிலாந்தை பொறுத்தவரை சதம் கடந்து அசத்திய வில்லியம்சன், ஜெசி ரைடர் உள்ளிட்டோர் இப்போட்டியிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பிரண்டன் மெக்கலம், மெக்கின்டோஸ், வாட்லிங் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. அனுபவ ரோஸ் டெய்லர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே இம்முறை இவரது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த Ampicillin No Prescription வேண்டும்.
மார்டின் அசத்தல்:
கடந்த போட்டியில் 2வது இன்னிங்சில் வேகத்தில் மிரட்டிய கிறிஸ் மார்டின் 5 விக்கெட்டை வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்பம் ஏற்படுத்தினார். இவரை தவிர கேப்டன் வெட்டோரி சுழலில் நம்பிக்கை அளித்து வருகிறார். இவர்களுக்கு ஜெசி ரைடர், படேல் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
டிராவிட் வாய்ப்பு
முதல் தர போட்டிகளில் 200வது கேட்ச் பிடித்து சாதித்துள்ள டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 198 கேட்ச் பிடித்துள்ளார். ஐதராபாத் டெஸ்ட் மூலம் டிராவிட், 200 வது “கேட்ச்’ பிடித்து சாதிக்க வாய்ப்பு உள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு
டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடிக்க காத்திருக்கிறார் இந்திய “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். இதுவரை 172 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 49 சதம் உட்பட 14,292 ரன்கள் எடுத்துள்ளார். ஆமதாபாத் டெஸ்டில் ஏமாற்றிய இவர், இன்று துவங்கும் ஐதராபாத் டெஸ்டில் 50வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி “பல்டி’
அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை முறைக்கு (யு.ஆர்.டி.எஸ்.,) எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்திய கேப்டன் தோனி, தற்போது மனம் மாறியுள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், “”சமீபகாலமாக டெஸ்ட் போட்டியின் போது ஒரு சில அம்பயர்கள், தவறான தீர்ப்பு வழங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுகின்றனர். உதாரணமாக சமீபத்திய ஆமதாபாத் டெஸ்டில் லட்சுமனுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, அம்பயர் மறுபரிசீலனை முறையை டெஸ்ட் போட்டியில் அனுமதிக்கலாம்,” என்றார்.

Add Comment