ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!!

கூகுளுடனான மோதலின் அடுத்த கட்டமாக, தனி மெயில் வசதி உள்ளிட்ட மென்பொருள் வசதிகளை தனது பயனாளர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது பேஸ்புக். இது நாளை துவங்கும் இணையதள மாநாட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சான் பிரான்சிஸ்கோவில் நாளை துவங்கி மூன்று தினங்கள் நடக்கிறது இணையதள மாநாடு [^] . இதில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று, புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு மெயில் சர்வீஸ் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் தடை Buy Ampicillin விதித்துள்ளது கூகுள். இதனை எதிர்கொள்ளும் விதமாக, கூகுளை விட அதிக வசதி கொண்ட மெயில் சேவையை அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தையும் டெவலப் செய்துள்ளது. நாளைய மாநாட்டில் இதனை அறிவிக்கவிருக்கிறது பேஸ்புக்.

இதனை எதிர்ப்பார்த்துள்ள கூகுள், அதற்குப் போட்டியாக வேறு பல வசதிகளை அறிவிக்கவிருக்கிறது.

அநேகமாக யாஹூ அல்லது ஏஓஎல் போன்ற நிறுவனங்களின் உதவியை பேஸ்புக் பெறக்கூடும் என்று தெரிகிறது. சன் டிவி [^] போன்ற உள்ளூர் சேனல்களில் பேஸ்புக் விளம்பரங்கள் வரத் துவங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது. இதற்காகவே சில நடுத்தர சமூகத் தளங்களை தன்வசப்படுத்தியுள்ளது கூகுள்.

எப்படியோ, இன்டர்நெட் கம்பெனிகள் தயவில் மக்களுக்கு புதுப்புது வசதிகள் கிடைத்தால் சரி!

Add Comment